ஆர். சுதர்சன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர். சுதர்சன்
பிறப்புஆர். சுதர்சன்
29 மே 1989 (1989-05-29) (அகவை 35)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
மற்ற பெயர்கள்Vijay Harsan
பணிதிரைப்பட தொகுப்பாளர்

ஆர். சுதர்சன் (R. Sudharsan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ரா. பார்த்திபன் சம்பந்தப்பட்ட படங்களில் பெரும்பாலும் பணியாற்றியுள்ளார். இவர் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ (2013) படத்தின் வழியாக அறிமுகமானார். [1]

தொழில்

சுதர்சன் கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் திரைப்பட தொகுப்பு படிப்பை படித்தார்.

சுதர்சன் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ (2013) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இயக்குனரின் மரணத்திற்குப் பிறகு, ரா. பார்த்திபன் சுதர்சனின் தொழில் வாழ்க்கைக்கு உதவுவதாக தெரிவித்தார். மேலும் அவரது அடுத்த படங்களான கதை திரைக்கதை வசனம் இயக்கம் ( 2014) மற்றும் கோடிட்ட இடங்களை நிரப்புக (2017) போன்ற படங்களில் வாய்ப்பளித்தார். [2] சுதர்சன் ஜீரோ (2016) படத்திலும் பணிபுரிந்தார். அப்படத்தில் இவரது பணியை Behindwoods.com பாராட்டியதுடயது. [3]

திரைப்படவியல்

படத்தொகுப்பாளராக

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்._சுதர்சன்&oldid=23717" இருந்து மீள்விக்கப்பட்டது