ஏ. பீம்சிங்
ஏ. பீம்சிங் | |
---|---|
பிறப்பு | திருப்பதி, மெட்ராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 15 அக்டோபர் 1924
இறப்பு | 16 சனவரி 1978 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 53)
மற்ற பெயர்கள் | பீம்பாய் |
பணி | திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படக் கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1949–1978 |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
ஏ. பீம்சிங் (15 அக்டோபர் 1924 - 16 சனவரி 1978) தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராவார். இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கியவர்.
ஆரம்பகால வாழ்க்கை
ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அகர்சிங்கின் மகன் பீம்சிங். அம்மா ஆதியம்மாள் ஆந்திராவை சேர்ந்தவர். முதல் மனைவி சோனாபாய் தஞ்சாவூர் ஐயங்கார் குடும்பம். மாமனார் ராகவாச்சாரி ஐயங்கார். அவரின் மாமியார் மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மனைவி சோனாபாயின் அண்ணன் திரைப்பட இயக்குநர். தமிழ் சினிமாவின் இரட்டை இயக்குனர்களாக இருந்த கிருஷ்ணன் - பஞ்சு, இவர்களில் கிருஷ்ணன் சோனாபாயின் அண்ணன்.[1]
இவர் மலையாள நடிகை சுகுமாரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சுரேசு பீம்சிங் என்ற மகன் பிறந்தார்.[2]
திரையுலக வாழ்க்கை
கிருஷ்ணன் - பஞ்சு என்றழைக்கப்பட்ட இரட்டை இயக்குநர்களிடம் ஒரு உதவித் தொகுப்பாளராகத் தனது தொழிலைத் துவக்கினார். பின்னர் உதவி இயக்குநர் என முன்னேறி, இயக்குநர் ஆனார். குடும்ப உறவுகள் பற்றிப் பேசும் படங்களை இயக்கினார். பெரும்பாலும் 'பா' என்ற எழுத்தை ஆரம்பமாகக் கொண்ட தலைப்புகளைத் தனது திரைப்படங்களுக்குச் சூட்டினார்.
இயக்கி & தயாரித்த தமிழ்த் திரைப்படங்கள்
- அம்மையப்பன் (1954)
- ராஜா ராணி (1956)
- பதி பக்தி (1958)
- திருமணம் (1958)
- பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959)
- பாகப்பிரிவினை (1959)[3]
- சகோதரி (1959)
- பொன்னு விளையும் பூமி (1959)
- படிக்காத மேதை (1960)
- களத்தூர் கண்ணம்மா (1960)
- பெற்ற மனம் (1960)
- பாசமலர் (1961)
- பாவ மன்னிப்பு (1961)
- பாலும் பழமும் (1961)
- பார்த்தால் பசி தீரும் (1962)
- படித்தால் மட்டும் போதுமா (1962)
- பந்த பாசம் (1962)
- செந்தாமரை (1962)
- பார் மகளே பார் (1963)
- பச்சை விளக்கு (1964)
- பழநி (1965)
- சாந்தி (1965)
- பாலாடை (1967)
- பாதுகாப்பு (1970)
- பாதபூஜை (1974)
- கணவன் மனைவி (1976)
- சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
- நீ வாழவேண்டும் (1977)
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
- கை பிடித்தவன் (1978)
- இறைவன் கொடுத்த வரம் (1978)
- கருணை உள்ளம் (1978)
தயாரித்து வசனம் எழுதிய திரைப்படம்
- சாது மிரண்டால் (1966)
- ஆலயம் (1967)
- பட்டத்து ராணி (1967)
மேற்கோள்கள்
- ↑ "சிவாஜியின் செல்லமான 'பீம்பாய்'... 'குடும்பக்கதை'களின் யதார்த்த இயக்குநர்; பாடல்களில் வித்தியாசம்; காட்சிகளில் எளிமை; வசனங்களில் இயல்பு; - சிவாஜியின் இயக்குநர் ஏ.பீம்சிங் 96வது பிறந்தநாள் ஸ்பெஷல்". இந்து தமிழ். 15 அக்டோபர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/591344-96th-birthday-of-a-bhimsingh.html. பார்த்த நாள்: 18 அக்டோபர் 2020.
- ↑ "பாசமலர், படிக்காதமேதை, பாலும் பழமும் சிவாஜியின் சிறந்த படங்களை இயக்கிய ஏ.பீம்சிங்". மாலை மலர். 4 February 2011 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304080112/http://www.maalaimalar.com/2011/02/04181708/director-beemsingh-history.html.
- ↑ "7th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. http://dff.nic.in/2011/7th_nff.pdf.