இணைமணி மாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இணைமணிமாலை என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ஆகும். இவ்வகைச் சிற்றிலக்கியத்தின் இலக்கணம் தொடர்பில் பாட்டியல் நூல்கள் தமக்குள் வேறுபடுகின்றன. சில நூல்கள் வெண்பாவும் அகவலும் மாறிமாறி வர அந்தாதியாக அமையும் நூறு பாடல்கள் கொண்டதே இணைமணிமாலை என்று கூற[1], இலக்கண விளக்கம் என்னும் நூல் "வெண்பாவும் அகவலும் வெண்பாவும் கலித்துறையுமாக இரண்டிரண்டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணிமாலை, வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என நூறுநூறு அந்தாதித் தொடையாக வரப்படுவது இணைமணிமாலை என்கிறது[2].

குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல், பாடல்
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 818

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=இணைமணி_மாலை&oldid=16779" இருந்து மீள்விக்கப்பட்டது