கலித்துறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கலித்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. இது பல்வேறு ஓசைகள் உடையது. நெடிலடிகள் நான்கு கொண்டிருக்கும். அவை நான்கும் எதுகை கொண்டிருக்கும். ஆழ்வார் பாடல்கள், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற படைப்புகளில் இப்பாவினம் மிகுந்து காணப்படுகிறது.

கட்டளைக் கலித்துறை இதன் வகைகளில் ஒன்று.[1] [2] இதில் கலி மண்டிலத் துறை [3] கலி நிலைத் துறை [4] என இரண்டு வகைகள் உண்டு. [5]

எடுத்துக்காட்டு 1

நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே
றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே....

சம்பந்தர் தேவாரம், 1058

உசாத்துணை

அடிக்குறிப்பு

  1. ‘நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை’. (யாப்பருஃங்கலம் 88]
  2. ‘ஐஞ்சீர் முடிவின் அடித்தொகை நான்மையொடு அஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை’. என்றார் காக்கைபாடினியார்.
    ‘ஐஞ்சீர் நான்கடி கலித்துறை ஆகும்’ என்றார் அவிநயனார்.
  3. ‘மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளைக்கும்;
    தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்;
    தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்;
    சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்’.
    இஃது அடிதோறும் பொருள் முடிந்து, அடி மறியாய், ஐஞ்சீர் அடியான் வந்தமையால், கலிமண்டிலத் துறை எனப்படும்.

  4. ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித்
    தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்,
    தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்
    கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே?’
    இஃது அடி மறி ஆகாதே ஐஞ்சீர் அடியான் வந்தமையால், கலி நிலைத் துறை எனப்படும்.

  5. யாப்பருங்கல விருத்தி பக்கம் 368
"https://tamilar.wiki/index.php?title=கலித்துறை&oldid=20551" இருந்து மீள்விக்கப்பட்டது