ஆனந்தக்கண்ணீர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆனந்தக்கண்ணீர்
Anandha Kanneer
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கே. விசயன்
தயாரிப்புசாந்தி நாராயணசாமி
டி. மனோகர்
திரைக்கதைகே. விசயன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
இலட்சுமி
ஒளிப்பதிவுதிவாரி
படத்தொகுப்புசெழியன்
கலையகம்சிவாஜி புரொடக்சன்சு
வெளியீடுமார்ச்சு 7, 1986 (1986-03-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆனந்தக்கண்ணீர் (Anandha Kanneer) என்பது 1986 இல் கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட, இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், இலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1986 மார்ச்சு 7 அன்று வெளியிடப்பட்டது.[1]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்தனர். [2][3] பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "எங்கள் குடும்பம் ஒரு அன்பின்"  மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம், இரமேஷ்  
2. "அம்மா நீ வாழ்க"  மலேசியா வாசுதேவன், பி. சுசீலா  
3. "நினைத்தால் நீ வர வேண்டும்"  வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
4. "மால போடுற கல்யாணமா?"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  

வரவேற்பு

கல்கியின் ஜெயமன்மதன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நல்ல குடும்பக் கதை என்று குறிப்பிட்டார்.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆனந்தக்கண்ணீர்&oldid=30658" இருந்து மீள்விக்கப்பட்டது