ஆனந்த ஜோதி
Jump to navigation
Jump to search
ஆனந்த ஜோதி | |
---|---|
இயக்கம் | வி. என். ரெட்டி, ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா (ஹரிஹரன் பிலிம்ஸ்) |
கதை | ஜாவர் சீதாராமன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஜி. இராமச்சந்திரன் தேவிகா கமல்ஹாசன் |
ஒளிப்பதிவு | ஜெ. ஜி. விஜயம் |
படத்தொகுப்பு | சி. பி. ஜம்புலிங்கம் |
வெளியீடு | சூன் 28, 1963 |
ஓட்டம் | 154 நிமிடம் |
நீளம் | 4518 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆனந்த ஜோதி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. என். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், தேவிகா, கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். நடிகை தேவிகா எம். ஜி.ஆர் உடன் நடித்த ஒரே படம் இதுவாகும்.
நடிகர்கள்
- எம். ஜி. ராமச்சந்திரன் - ஆனந்தன்
- தேவிகா - ஜோதி
- எம். ஆர். ராதா - புண்ணியகோடி
- எஸ். ஏ. அசோகன் - காவல் ஆய்வாளர் பாசுகர்
- எஸ். வி. சகஸ்ரநாமம் முத்தையா பிள்ளை
- எஸ். வி. இராமதாஸ் - அபு சலீம்
- ஜாவர் சீதாராமன் - சி.ஐ.டி. சுந்தர்
- கமல்ஹாசன் - பாலு
- பி. எஸ். வீரப்பா - ஜம்பு
- மனோரமா - மனோ
தயாரிப்பு
பி. எஸ். வீரப்பா இப்படத்தை தயாரித்தார். எம்.ஜி.ஆரும் தேவிகாவும் இணைந்து நடித்த ஒரே படம் இதுவாகும். இப்படம் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது.[1][2]
எம்.ஜி.ஆர் உடன் கமல்ஹாசன் திரையில் நடித்த ஒரே திரைப்படம் இதுவாகும். பின்னர் 1972 ஆண்டில் எம்.ஜி.ஆர் நடித்த சங்கே முழங்கு மற்றும் நான் ஏன் பிறந்தேன் போன்ற படங்களுக்கு உதவி நடண இயக்குநராக கமல்ஹாசன் பணியாற்றியுள்ளார்.
பாடல்கள்
ஆனந்த ஜோதி | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1963 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
இசைத் தயாரிப்பாளர் | விசுவநாதன்-இராமமூர்த்தி |
இப்படத்திற்கு விசுவநாதன்-இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[3] இப்படத்தின் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
எண் | பாடல் | பாடகர் (கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | காலமகள் | பி. சுசீலா | கண்ணதாசன் | 03:32 |
2 | கடவுள் இருக்கின்றான் | டி. எம். சௌந்தரராஜன் | 04:23 | |
3 | நினைக்கத் தெரிந்த | பி. சுசீலா | 04:24 | |
4 | ஒரு தாய் மக்கள் | டி. எம். சௌந்தரராஜன் | 04:00 | |
5 | பல பல | டி. எம். சௌந்தரராஜன் | 03:06 | |
6 | பனியில்லாதா மார்கழியா | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:31 | |
7 | பொய்யிலே பிறந்து | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:49 |
மேற்கோள்கள்
- ↑ "தேவிகா: 3. நடிப்பு தண்ணீர் பட்ட பாடு..!". தினமணி. 3 செப்டம்பர் 2016 இம் மூலத்தில் இருந்து 2021-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210529055509/https://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/sep/03/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2559564.html. பார்த்த நாள்: 29 மே 2021.
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிஷர்ஸ் இம் மூலத்தில் இருந்து 2021-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210602212324/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963-cinedetails4.asp. பார்த்த நாள்: 2021-05-29.
- ↑ "எம்.எஸ். விஸ்வநாதன் (1928– 2015) - மரணமில்லா மகா கலைஞன்". தினமணி. 15 சூலை 2015. https://www.dinamani.com/tamilnadu/2015/jul/14/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1928%E2%80%93-2015---%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF-1148780.html. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2020.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 1963 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- தேவிகா நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். வி. சகஸ்ரநாமம் நடித்த திரைப்படங்கள்
- பி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்