அனு ஹாசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அனு ஹாசன்
Anu Hasan1.JPG
இயற் பெயர் அனுராதா சந்திரஹாசன்
பிறப்பு சூலை 15, 1970 (1970-07-15) (அகவை 54)
இந்தியா திருச்சி, தமிழ் நாடு, இந்தியா
தொழில் நடிகை, வடிவழகி, தொகுப்பாளர், தொழில் முனைவோர்
நடிப்புக் காலம் 1995-இன்றளவும்

அனு ஹாசன் (பிறப்பு - சூலை 15, 1970) தமிழ் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இயக்குனர் சுஹாசினி தனது இந்திரா திரைப்படத்தின் மூலம் அனு ஹாசனை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தமிழ்ப்படங்களில் முக்கியமான துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் அனு என்னும் பிரபலங்களை நேர்காணும் நிகழ்ச்சியை மூன்று பருவங்களிற்கு தொகுத்து வழங்கினார். இவர் தொழில் முனைவோர், வடிவழகி, இசைக்கலைஞர், தற்காப்புக் கலை நிபுணர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

கல்வி

அனு தனது பள்ளிப்படிப்பை திருச்சியிலுள்ள புனித சோசப் ஆங்கிலோ இந்தியர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிலும் ஆர். எசு. கிருஷ்ணன் மேல்நிலைப் பள்ளிலும் கல்விப் பயின்றார். இராசத்தானின் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில் இயற்பியல் மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[1][2]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்தரம் மொழி குறிப்புக்கள்
1995 இந்திரா இந்திரா தமிழ்
2001 ஆளவந்தான் கமலின் அம்மா தமிழ் விருந்தினர் தோற்றம்
2002 ரன் சிவாவின் அக்கா தமிழ் வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது
2003 நள தமயந்தி பத்ரியின் மனைவி தமிழ்
ஆஞ்சநேயா பரமகுருவின் அக்கா தமிழ்
2008 அக்கு அனு தமிழ்
சந்தோஷ் சுப்ரமணியம் தமிழ் விருந்தினர் தோற்றம்
தாம் தூம் சரசு தமிழ்
2009 சர்வம் கீதா ஈஸ்வர் தமிழ் விருந்தினர் தோற்றம்
ஆதவன் அனு தமிழ்
Evaraina Epudaina வெங்கட்டின் மைத்துனி தெலுங்கு
2010 மாஞ்சா வேலு கார்த்திக்கின் மனைவி தமிழ்
இரண்டு முகம் தமிழ்
தொட்டுப்பார் தமிழ்
2011 கோ அவராக தமிழ் கௌரவ தோற்றத்தில்
2011 Red Building Where The Sun Sets ஆங்கிலம் தேசிய விருது பெற்றது
2012 Endhukante... Premanta! ரம்யா தெலுங்கு
ஏன் என்றால் காதல் என்பேன் தமிழ்
டெட் பொயின்ட் அன்வரின் தாய் அரபு மிலாட் லடூஃப் இயக்கியுள்ளார்
ஆயிரம் கனவுகள் அனு / அனிதா தமிழ் நந்ததுரை இயக்கத்தில், தற்போது இலண்டனில் படப்பிடிப்பில்
கானகம் அனு தமிழ் மாமணி இயக்கத்தில், தற்போது சென்னையில் படப்பிடிப்பில்
குந்தபுரா கௌரி ஐயர் மலையாளம் சுதந்தரத்திற்கு, முன் பின் வரலாற்றைபற்றியது, தயாரிப்பிற்கு பிந்தைய பணியில்[3]

மேற்கோள்களும் குறிப்புகளும்

"https://tamilar.wiki/index.php?title=அனு_ஹாசன்&oldid=22362" இருந்து மீள்விக்கப்பட்டது