அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. அணைக்கட்டில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,31,047 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,068 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 12,728 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[3]
அணைக்கட்டு, அப்புக்கல், அத்திக்குப்பம், பிராமணமங்கலம், தேவிசெட்டிக்குப்பம், இலவம்பாடி, இறைவன்காடு, கெங்கநல்லூர், சார்தன்கொல்லை,கழணிப்பாக்கம், கந்தனேரி, கரடிகுடி, கருங்காலி, கீழ்கொத்தூர்,கீழ்க்கிருட்டிணாபுரம், மடையப்பட்டு, மகமதுபுரம், மருதவல்லிப்பாளையம்,மேலரசம்பட்டு, நேமந்தபுரம், ஒதியத்தூர், ஒங்கப்பாடி, பாலம்பட்டு, பீஞ்சமந்தை, பின்னத்துரை, பொய்கை,புத்தூர், சத்தியமங்கலம், செதுவாலை, சேர்பாடி, திப்பசமுத்திரம், ஊனை, வல்லண்டராமம், ஊனைவாணியம்பாடி, வண்ணாந்தாங்கல், வரதலாம்பட்டு, வசந்தநடை மற்றும் விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றங்கள் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளன.
வெளி இணைப்புகள்
- வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்