ஊஞ்சலூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>சத்தார் ஊஞ்சலூர் பயனரால் செய்யப்பட்ட 09:12, 3 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
ஊஞ்சலூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 2,628 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஊஞ்சலூர் (ஆங்கிலம்:Unjalaur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.ஈரோட்டிலிருந்து சுமார் 36 கி.மீ தொலைவில் ஈரோட்டுக்கும் கரூருக்கும் நடுவில் உள்ளது. தொடக்கப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளி,உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அருகருகே ரயில் நிலையமும் பேருந்து நிறுத்தமும் போன்றவற்றுடன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி கோவில், நாகேசுவரர் கோவில்களைக் கொண்டு ஊரின் கிழக்கே காவிரியும் மேற்கே காலிங்கராயன் கால்வாயும் ஓட பசுமையுடன் விளங்கும் இவ்வூரில் 900 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் மும்மூர்த்திகள் தலமான கொடுமுடி அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2628 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஊஞ்சலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊஞ்சலூர் மக்கள் தொகையில் 6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=ஊஞ்சலூர்&oldid=202743" இலிருந்து மீள்விக்கப்பட்டது