மணல்மேடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>ManiGVT பயனரால் செய்யப்பட்ட 12:40, 14 அக்டோபர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
மணல்மேடு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 9,017 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மணல்மேடு (ஆங்கிலம்:Manalmedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.

மக்கள் வகைப்பாடு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 82.72% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர். [3]

மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு. இந்த பகுதியில் வன்னியர், சாம்பவர் (பறையர்), முதலியார், நாயுடு, விஸ்வகர்மா மற்றும் பிள்ளை போன்ற சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர் நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

வல்லம்
பாப்பாக்குடி
பெரிய இலுப்பபட்டு
சின்ன இலுப்பபட்டு
இலுப்பபட்டு
ராஜசூரியன்பேட்டை
வையாபுரிதிடல்
மணல்மேடு
அகரமணல்மேடு
ராதாநல்லூர்
விருதங்கநல்லூர்
ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

புகழ் பெற்றவர்கள்

மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.
மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார்.

ஆலயங்கள்

  • திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
  • இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)

என்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30வது தலம்.

  • மாரியம்மன் கோயில்
மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் கொள்ளிடம் ஆற்றில் தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் வைத்தீசுவரன்கோயிலில் இருந்து பந்தநல்லூர் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. [ http://www.census2011.co.in/data/town/803669-manalmedu-tamil-nadu.html Manalmedu Population Census 2011]
"https://tamilar.wiki/w/index.php?title=மணல்மேடு&oldid=198880" இலிருந்து மீள்விக்கப்பட்டது