ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13

போளூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 10:06, 19 சனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("Polur.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Source of derivative work not specified since 6 January 2020.)
Jump to navigation Jump to search
போளூர்

POLUR

சிறப்பு நிலை பேரூராட்சி
போளூர் is located in தமிழ்நாடு
போளூர்
போளூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
போளூர் is located in இந்தியா
போளூர்
போளூர்
போளூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மாகாணம்தொண்டை நாடு
வருவாய் கோட்டம்ஆரணி
சட்டமன்றத் தொகுதிபோளூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைசிறப்பு நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.சேகரன்
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு
 • மொத்தம்12.58 km2 (4.86 sq mi)
 • பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
ஏற்றம்
173 m (568 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்55,278
இனம்போளூர்காரன்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
606803
இந்தியாவில் தொலைபேசி எண்கள்04181
வாகனப் பதிவுTN 97
சென்னையிலிருந்து தொலைவு172 கி.மீ (107மைல்)
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு38 கி.மீ (24மைல்)
வேலூரிலிருந்து தொலைவு53 கி.மீ (33மைல்)
ஆரணியிலிருந்து தொலைவு29 கிமீ (18மைல்)
வந்தவாசியிலிருந்து தொலைவு58 கிமீ (36மைல்)
சித்தூரிலிருந்து தொலைவு89 கிமீ (55மைல்)
கடலூரிலிருந்து தொலைவு139 கிமீ (86மைல்)
இணையதளம்போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி

போளூர் (ஆங்கிலம்:Polur) இந்திய நாடு, தமிழ்நாடு மாநிலமான, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, போளூர் வட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியம், போளூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகர நிர்வாக வசதிக்காக 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலை பேரூராட்சியும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

இந்த நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்காவது பெரிய நகரமாகும். இந்த நகரத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. இந்த நகரம் ஆரணி - செங்கம் மாநில நெடுஞ்சாலை மற்றும் கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஆண்மீக நகரான திருவண்ணாமலைக்கும், பட்டு நகரான ஆரணிக்கும் அருகாமையில் அமைந்துள்ளது.

போளூர் நகரம் உருவாக்கம்

  • போளூர் தொகுதியை 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி முதல் தேர்தல் 1951 ஆம் ஆண்டு சந்தித்தது.

பெயர்க்காரணம்

பொருளூர் என்ற சொல் காலப்போக்கில் போளூர் என மாறியது. பொருளூர் என்பது செல்வத்தின் இடம் என்று பொருள். இது தற்போது போளூர் என்று அழைக்கப்படுகிறது. [2]. இங்கிருந்து திருவண்ணாமலை மற்றும் ஆரணி நகரை அரைமணி நேரத்தில் அடையலாம். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.

அமைவிடம்

கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் வழித்தடத்தில் அமைந்த போளூர் நகரத்திற்கு தெற்கே திருவண்ணாமலை 38 கிமீ; வடக்கே வேலூர் 52 கிமீ; தென்கிழக்கே ஆரணி 29 கிமீ; கிழக்கே சேத்துப்பட்டு 28 கிமீ மற்றும் மேற்கே சமுனாமரத்தூர் 48 கிமீ தொலைவில் உள்ளது.தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 171 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

12.58 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 86 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மக்கள் தொகை பரம்பல்


போளூரிலுள்ள சமயங்கள் (2011)

  இந்து (94.02%)
  சைனம் (0.01%)
  மற்றவை (0.12%)

[3]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 13,706 வீடுகளும், போளூர் நகர மக்கள் தொகை 55274 மக்கள்தொகையும் கொண்டது. இவற்றில் ஆண்கள் 25637 பேரும், பெண்கள் 29637 பேரும் உள்ளன. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.87% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
19019,767—    
19119,946+1.8%
192112,330+24.0%
193113,098+6.2%
194113,967+6.6%
195115,212+8.9%
196116,441+8.1%
198123,462+42.7%
199130,196+28.7%
200141,376+37.0%
201155,278+33.6%
Sources:

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது

பொருளாதாரம்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, போளூர் நகர தொழிலாளர் பங்கு விகிதம் 35.50% ஆகும். போளூர் வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி குறைவாகவே கொண்டுள்ளது. அரிசி தொழிற்சாலை, பட்டுப்புடவை, விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அன்றாட வேலைக்காக சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்

சிறப்புகள்

போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலைக்கு, வேலூர் மற்றும் ஆரணியிலிருந்து வர வேண்டுமானால் போளூர் வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் வட தமிழகம் ஆகும். போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ள்து. போளூர் மலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.

இது சுயம்பு வடிவம் ஆனது.

நிர்வாகம் மற்றும் அரசியல்

இந்நகரம் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. போளூர் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகரை போளூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.

பேரூராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி போளூர் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.வி.சேகரன்
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத்

அரசியல்

வருவாய் வட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் போளூர் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்களும், 2,51,655 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் போளூர் பேரூராட்சி மற்றும் போளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.

போக்குவரத்து

சாலை வசதிகள்

போளூரிலுள்ள பேருந்து நிலையம் செல்லும் சாலை
போளூர் நகரம்
போளூர் நகரம்

போளூர் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆகிய சாலைகள் போளூர் நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளாகும்.

பேருந்து சேவைகள்

இதனையும் காண்க: போளூர் பேருந்து நிலையம்

போளூரில் போக்குவரத்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பேருந்து சேவைகள் நடைபெறுகிறது.

ரயில் போக்குவரத்து

போளூரில் ஒரு ரயில் நிலையமும் உள்ளது. புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - ஆரணி களம்பூர் - வேலூர் காட்பாடி - திருப்பதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி மற்றும் வாரந்திர ரயில்கள் மற்றும் அனைத்து ரயில்களும் இந்த போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.


வண்டியின் பெயர் வண்டி எண் புறப்படும் இடம் சேருமிடம்
திருப்பதி விழுப்புரம் பயணிகள் வண்டி 56885 திருப்பதி விழுப்புரம்
விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி 22603 விழுப்புரம் திருப்பதி
விழுப்புரம் காட்பாடி பயணிகள் வண்டி 56886 விழுப்புரம் காட்பாடி
காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி 56881 காட்பாடி விழுப்புரம்
விழுப்புரம்-திருப்பதி 56882 விழுப்புரம் திருப்பதி
காட்பாடி-விழுப்புரம் 56883 காட்பாடி விழுப்புரம்
காட்பாடி-விழுப்புரம் 56884 காட்பாடி விழுப்புரம்
புருலியா SF விரைவு வண்டி 22606 விழுப்புரம் புருலியா
பாமணி SF விரைவு வண்டி 17407 திருப்பதி மன்னார்குடி
காரக்பூர் விரைவு வண்டி 22604 புதுச்சேரி காரக்பூர்
சாலுக்யா விரைவு வண்டி 11005 மும்பை தாதர் சென்ட்ரல் புதுச்சேரி
புதுச்சேரி-திருப்பதி வாரந்திர விரைவு வண்டி 17414 புதுச்சேரி திருப்பதி
ஆரணி-கடலூர் பயணிகள் வண்டி 12694 ஆரணி கடலூர்
சாலுக்யா விரைவு வண்டி 11006 புதுச்சேரி பெங்களூரு

ஆதாரங்கள்

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
  2. போளூர் பேரூராட்சியின் இணையதளம்
  3. Polur Population Census 2011
  4. 4.0 4.1 "Population Details". Tiruvannamalai municipality. 2011. Archived from the original on 27 February 2014. Retrieved 2012-12-29.
  5. "Polur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=போளூர்&oldid=189070" இலிருந்து மீள்விக்கப்பட்டது