க. தம்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>S. ArunachalamBot
சி பரிசுகளும் விருதுகளும்: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
வரிசை 11: வரிசை 11:
* நில அளவைத் திணைக்கள இந்து சங்கப் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி [[1975]] ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ''ஒருதாய் ஒரு மகள் ஒரு தேவன்'' என்னும் சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
* நில அளவைத் திணைக்கள இந்து சங்கப் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி [[1975]] ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ''ஒருதாய் ஒரு மகள் ஒரு தேவன்'' என்னும் சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
* [[1998]] ஆம் ஆண்டு காலப் பகுதியில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் இவர் எழுதிய ''பணக்கார அநாதைகள்'' என்ற சிறுகதையை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து இந்துசமய கலாசார இலக்கியக்குழு இவருக்குப் பணப் பரிசு கொடுத்துக் கௌரவித்தது.
* [[1998]] ஆம் ஆண்டு காலப் பகுதியில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் இவர் எழுதிய ''பணக்கார அநாதைகள்'' என்ற சிறுகதையை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து இந்துசமய கலாசார இலக்கியக்குழு இவருக்குப் பணப் பரிசு கொடுத்துக் கௌரவித்தது.
* இலக்கியத்துறைக்குப் பங்களிப்புச் செய்ததற்காக [[2008]] ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் விருதை இந்துக்கலாசார அமைச்சு வழங்கியது.
* இலக்கியத்துறைக்குப் பங்களிப்புச் செய்ததற்காக [[2008]] ஆம் ஆண்டிற்கான கலாபூஷணம் விருதை இந்துக்கலாசார அமைச்சு வழங்கியது.


== வெளிவந்த நூல்கள் ==
== வெளிவந்த நூல்கள் ==
வரிசை 18: வரிசை 18:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.thinakkural.com/news/2009/1/15/importantnews_page65845.htm ஈழத்தின் மூத்த எழுத்தாளர் புலோலியூர் தம்பையா காலமானார்]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}

[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]

13:32, 19 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

புலோலியூர் க.தம்பையா (இறப்பு: ஜனவரி 12, 2009) இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர். அரை நூற்றாண்டுக்கு மேலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்த இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் ,நகைச்சுவைகள், நாடகங்கள், கவிதைகளைப் படைத்துள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

க. தம்பையா யாழ்ப்பாண மாவட்டம், புலோலியைச் சேர்ந்தவர். 1966 ஆம் ஆண்டு நில அளவைத் திணைக்களத்தில் படவரைஞர் தொழில்நுட்ப அலுவலராகப் பதவியேற்றுப் பல உயர் பதவிகளை வகித்தபின்னர் 1984 ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறினார். அதன் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக யாழ்நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

இவரது சிறுகதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகளில் அதிக அளவில் வெளிவந்துள்ளன.

பரிசுகளும் விருதுகளும்

  • கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனின் மணிவிழாவினை ஒட்டி 1966 ஆம் ஆண்டு இலங்கை முழுவதுக்குமாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசாகத் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
  • சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாக 1976 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ஓர் ஆசிரியர் அநாதையாகிறார் என்ற சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
  • நில அளவைத் திணைக்கள இந்து சங்கப் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி 1975 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ஒருதாய் ஒரு மகள் ஒரு தேவன் என்னும் சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
  • 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் இவர் எழுதிய பணக்கார அநாதைகள் என்ற சிறுகதையை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து இந்துசமய கலாசார இலக்கியக்குழு இவருக்குப் பணப் பரிசு கொடுத்துக் கௌரவித்தது.
  • இலக்கியத்துறைக்குப் பங்களிப்புச் செய்ததற்காக 2008 ஆம் ஆண்டிற்கான கலாபூஷணம் விருதை இந்துக்கலாசார அமைச்சு வழங்கியது.

வெளிவந்த நூல்கள்

  • அழியும் கோலங்கள் (சிறுகதைத்தொகுதிகள்)
  • ஐம்பதிலும் ஆசைவரும் (சிறுகதைத்தொகுதிகள்)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=க._தம்பையா&oldid=309458" இலிருந்து மீள்விக்கப்பட்டது