ஐந்திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Thiagalingam "ஐந்திணை என்பது தமிழரின் அகவாழ்வு-நெறி. அகத்திணை, புறத்திணை ஆகிய ஒவ்வொன்றையும் தொல்காப்பியர் ஏழு ஏழாகப் பகுத்துக் காட்டுகிறார். அவற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சி 2401:4900:338B:DA0A:6CFA:DEFF:FEB0:ECA2ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
09:54, 19 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
ஐந்திணை என்பது தமிழரின் அகவாழ்வு-நெறி. அகத்திணை, புறத்திணை ஆகிய ஒவ்வொன்றையும் தொல்காப்பியர் ஏழு ஏழாகப் பகுத்துக் காட்டுகிறார். அவற்றில் அகத்திணைக்கு உரிய 7 திணைகளில் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் பொருந்தாக் காமங்கள். எனவே இவை இரண்டையும் விடுத்து ஏனைய ஐந்தை ஐந்திணை என்பர்.
ஒரு பாடல் இன்ன திணையைச் சேர்ந்தது என்பது ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே கொள்ளப்படுகிறது. அதாவது 'திணைப் பாகுபாடு' செய்யப்படுகிறது. உரிப்பொருள் அல்லாதவை மயங்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1] எனவே மயங்காத உரிப்பொருளான திணைக்குறிய ஒழுக்க முறைகளே இன்ன திணையைச் சேர்ந்தது என வரையறுத்துக் காட்டும் என்பது தெளிவு.
அடிக்குறிப்பு
- ↑ உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல்காப்பியம் 3-15 அகத்திணையியல்)