ஐந்திணை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஐந்திணை என்பது தமிழரின் அகவாழ்வு-நெறி. அகத்திணை, புறத்திணை ஆகிய ஒவ்வொன்றையும் தொல்காப்பியர் ஏழு ஏழாகப் பகுத்துக் காட்டுகிறார். அவற்றில் அகத்திணைக்கு உரிய 7 திணைகளில் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் பொருந்தாக் காமங்கள். எனவே இவை இரண்டையும் விடுத்து ஏனைய ஐந்தை ஐந்திணை என்பர்.

ஒரு பாடல் இன்ன திணையைச் சேர்ந்தது என்பது ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே கொள்ளப்படுகிறது. அதாவது 'திணைப் பாகுபாடு' செய்யப்படுகிறது. உரிப்பொருள் அல்லாதவை மயங்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1] எனவே மயங்காத உரிப்பொருளான திணைக்குறிய ஒழுக்க முறைகளே இன்ன திணையைச் சேர்ந்தது என வரையறுத்துக் காட்டும் என்பது தெளிவு.

அடிக்குறிப்பு

  1. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல்காப்பியம் 3-15 அகத்திணையியல்)
"https://tamilar.wiki/index.php?title=ஐந்திணை&oldid=20380" இருந்து மீள்விக்கப்பட்டது