12 (எண்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
← 11 12 13 →
முதலெண்twelve
வரிசை12-ஆம்
(பன்னிரண்டாம்)
எண்ணுருஇரு தசம எண்
காரணியாக்கல்22· 3
காரணிகள்1, 2, 3, 4, 6, 12
ரோமன்XII
கிரேக்க முன்குறிdodeca-
இலத்தீன் முன்குறிduodeca-
இரும எண்11002
முன்ம எண்1103
நான்ம எண்304
ஐம்ம எண்225
அறும எண்206
எண்ணெண்148
பன்னிருமம்1012
பதினறுமம்C16
இருபதின்மம்C20
36ம்ம எண்C36
மலையாளம்൰൨
பெங்காலி১২
எபிரேயம்י"ב
பாபிலோனிய எண்ணுருக்கள்𒌋𒐖

12 அல்லது பன்னிரண்டு (twelve) என்பது பதினொன்றுக்கும் பதிமூன்றிற்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும். இவ்வெண் 2, 3, 4 மற்றும் 6 ஆகிய எண்களால் வகுபடும் பகு எண் ஆகும். 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் கதிரவனைச் சுற்றி வருகிறது. இது மேற்கத்திய நாட்காட்டி மேலும் ஒரு நாளின் கால அலகுகள் உட்பட பல நேரக்கட்டுப்பாடு அமைப்புகளுக்கு மையமாகிறது. உலகிலுள்ள முக்கிய மதங்களில் இவ்வெண் அடிக்கடி தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பன்னிரண்டு என்பது (twelve) ஓரசைச் சொற்பெயரைக்கொண்ட மிகப்பெரிய எண் ஆகும்.

கணித பண்புகள்

  1. 12, ஆறாவது பகு எண் ஆகும்.
  2. 12, 3இன் மீத்தொடர்பெருக்கமாகும்.[1][2]
  3. 12, நான்காவது செவ்வக எண் ஆகும். (3 × 4 சமமாகும்)[3]
  4. 12, மிகச்சிறிய மிகையெண்ணாகும். அதாவது தனது வகுஎண்களின் கூட்டுத்தொகையைவிடச் சிறிய எண்களிலிலேயே மிகச் சிறியது. (12 இன் வகுஎண்களின் கூட்டுத்தொகையான 16ஐ விடச் சிறியதாக 12 உள்ளது: 1 + 2 + 3 + 4 + 6 = 16) .[4]

காரணிகள்

பன்னிரண்டின் நேர்க் காரணிகள் 1, 2, 3, 4, 6, 12 என்பனவாகும்.[5]


அடிப்படை கணக்கீட்டு பட்டியல்

பெருக்கல் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 50 100 1000
12 × x 12 24 36 48 60 72 84 96 108 120 132 144 156 168 180 192 204 216 228 240 252 264 276 288 300 600 1200 12000
வகுத்தல் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
12 ÷ x 12 6 4 3 2.4 2 1.714285 1.5 1.3 1.2 1.09 1 0.923076 0.857142 0.8 0.75
x ÷ 12 0.083 0.16 0.25 0.3 0.416 0.5 0.583 0.6 0.75 0.83 0.916 1 1.083 1.16 1.25 1.3
அடுக்கேற்றம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
12x 12 144 1728 20736 248832 2985984 35831808 429981696 5159780352 61917364224 743008370688 8916100448256
x12 1 4096 531441 16777216 244140625 2176782336 13841287201 68719476736 282429536481 1000000000000 3138428376721 8916100448256

மேற்கோள்கள்

  1. Sloane, N. J. A. (ed.). "Sequence A002808 (The composite numbers: numbers n of the form x*y for x > 1 and y > 1.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  2. "Sloane's A000178: Superfactorials". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
  3. Sloane, N. J. A. (ed.). "Sequence A002378 (Oblong (or promic, pronic, or heteromecic) numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  4. Sloane, N. J. A. (ed.). "Sequence A005101 (Abundant numbers (sum of divisors of m exceeds 2m).)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
  5. ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=12_(எண்)&oldid=147141" இருந்து மீள்விக்கப்பட்டது