10 ரூபாய் பணத்தாள் (இந்தியா)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox banknote இந்திய 10 ரூபாய் பணத்தாள் (Indian 10-rupee banknote (10) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியால் 1996 இல் முதலாவதாக வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி வரிசை பணத்தாள்களில் இந்த 10 பணத்தாளும் அடங்கும். இது தற்போதும் புழக்கத்தில் உள்ளது.[1]

காலனித்துவ காலத்திலிருந்து 10 ரூபாய் பணத்தாள் வெளியிடப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய நாணயக் கட்டுப்பாட்டை 1923 ஆம் ஆண்டில் எடுத்துக் கொண்டதிலிருந்தும் தொடர்ந்து, 10 ரூபாய் பணத்தாள் வெளியிடப்பட்டு வருகிறது.[2]

மகாத்மா காந்தி வரிசை

வடிவம்

மகாத்மா காந்தி வரிசையில் 10 பணத்தாள் 137 × 63 மிமீ அளவில் ஆரஞ்சு-ஊதா வண்ணத்தில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன், பக்கவாட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்துடன் அமைந்துள்ளது. அதில் பணத்தாளின் மதிப்பை பார்வையற்றவர்களும் அடையாளம் காண உதவுவதற்காக பிரெயில் அம்சம் உள்ளது. பணத்தாளின் பின்பக்கம் காண்டாமிருகம், யானை , புலி, இந்தியத் தாவரங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

2011 இக்குப் பிறகு, வெளியிடப்பட்ட புதிய ₹10 தாள்களில் குறியீடு இடம்பிடித்தது.[3] 2005 க்கு முன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் 2014 மார்ச்சு 31 முதல் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 சனவரியில் வெளியிட்டது. பின்னர் காலக்கெடுவை 2015 சனவரி 1 வரை நீட்டித்தது. இந்த காலக்கெடு மேலும் 2016 சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது..[4]

இந்திய 10 ரூபாயின் புதிய பதிப்பு விரைவில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி 2017 ஆண்டு மார்ச்சு மாதம் அறிவித்தது. இந்த நோட்டுகள் 2005 மகாத்மா காந்தி தொடரில் அச்சிடப்படும்.[5]

மகாத்மா காந்தி புதிய வரிசை

வடிவம்

மகாத்மா காந்தி புதிய வரிசையில் 10 ரூபாய் பணத்தாள்களை வெளியிடப்போவதாக 2018 சனவரி 5 அன்று செய்திகள் வெளியாயின. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதிரியின்படி, புதிய பத்து ரூபாய் பணத்தாளானது சாக்லெட் பழுப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையொப்பத்துடன், மகாத்மா காந்தி உருவமும், பின்பக்கம் கொனார்க் சூரியக் கோயில் கட்டுமானத்தில் உள்ள தேர்ச் சக்கர சிற்பம், தூய்மை இந்தியா இலட்சினை ஆகியன இடம்பெற்றுள்ளது சூரிய முத்திரை, தேவநாகரியில் எண் உரு மற்றும் 10 என்ற எழுத்து உள்ளிட்டவை அச்சடிக்கப்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்துக்கு வரும் என்றும், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. இது 66 மிமீ x 123 மிமீ அளவில் இருக்கும்.

மொழிகள்

மற்ற இந்திய ரூபாய் நோட்டுகள் போல, 10 ரூபாய் பணத்தாள்களிலும் 17 இந்திய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம், இந்தியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றிருந்ததன. மொழிகளின் வரிசை பின்வருமாறு: அசாமி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.

ஒன்றிய நிலை அலுவல் மொழி வகைகள்
மொழி 10
ஆங்கிலம் Ten rupees
இந்தி दस रुपये
மாநில நிலை அலுவல் மொழிகள் 15
அசாமி দহ টকা
வங்காளி দশ টাকা
குசராத்தி દસ રૂપિયા
கன்னடம் ಹತ್ತು ರುಪಾಯಿಗಳು
காசுமீரி دٔہ رۄپیہِ
கொல்கனி धा रुपया
மலையாளம் പത്തു രൂപ
மராத்தி दहा रुपये
நேபாளி दस रुपियाँ
ஒடியா ଦଶ ଟଙ୍କା
பஞ்சாபி ਦਸ ਰੁਪਏ
சமசுகிருதம் दशरूप्यकाणि
தமிழ் பத்து ரூபாய்
தெலுங்கு పది రూపాయలు
உருது دس روپیے

சிங்க முத்திரை வரிசை

1970 சிங்க முத்திரை வரிசையின் 10 ரூபாய் வரிசையில், அசோகத் தூண் இடம்பெற்றிருந்தது மேலும் பணத்தின் மதிப்பு நோட்டின் பின்புறத்தில் இந்தி, அசாமி, வங்காளி, குசராத்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு , உருது ஆகியவற்றில் எழுதப்பட்டு இருந்தது, மேலும் இரண்டு மயில்களின் படங்களும் இடம்பெற்றன.[6]

ஜார்ஜ் VI வரிசை

படிமம்:Colonial Indian Ten Rupees Observe (1937-43).jpg
1937 முதல் 1943 வரை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பத்து ரூபாய் பணத்தாள்.
படிமம்:Colonial Indian Ten Rupees Reverse (1937-43).jpg
1937 முதல் 1943 வரை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பத்து ரூபாய் பணத்தாளின் பின்பக்கம்.

1937 ஆம் ஆண்டின் ஜார்ஜ் VI வரிசையின் 10 ரூபாய் பணத்தாளானது ஆறாம் ஜார்ஜின் படத்தைக் கொண்டிருந்தது. இதன் பின்புறம் இரு யானைகளும் உருது, இந்தி, வங்காளி, பர்மியம், தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது.[7]

மேற்கோள்கள்

  1. "Mahtma Gandhi (MG) Series 1996". Your Guide to Money Matters. Reserve Bank of India. Archived from the original on 12 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2012.
  2. "India Paper Money A Retrospect". Republic India Issues. Reserve Bank of India. Archived from the original on 18 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2012.
  3. "Issue of ₹10/- Banknotes with incorporation of Rupee symbol (₹)". RBI. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டெம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Withdrawal of Currencies Issued Prior to 2005". Press Information Bureau. 25 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2014.
  5. "New Rs 10 notes with more security coming soon". 9 மார்ச்சு 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. 10 rupee banknote - 1970 - image - banknote.ws
  7. 10 rupee banknote - 1937 - image - banknote.ws

வார்ப்புரு:இந்திய நாணயங்கள்