மயில்
மயில் Peafowl | |
---|---|
இந்திய மயில் (ஆண்) | |
பச்சை மயில் (பெண்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | கால்லிபார்ம்சு |
குடும்பம்: | பாசியானிடே |
துணைக்குடும்பம்: | பாசியானிடே |
இனங்கள் | |
இந்திய மயில் (Pavo cristatus) |
மயில் என்பது ஒரு பறவை இனமாகும். இது இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1] இந்தப் பேரினத்தில் மூன்று மயில் இனங்கள் உள்ளன. தெற்காசியாவில் தென்படும் இந்திய மயில் மற்றும் பச்சை மயில் மற்றும் ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயில் ஆகியனவாகும்.[2][3][4]
மயில்கள் பால் ஈருருமை கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகைகளை கொண்டிருக்கின்றன. பெண் மயில்களை கவர முற்படும்போது இந்த தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய விசிறி போல காட்டுகின்றன. மயிலின் விரிவான தொகையின் செயல்பாடு பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. 19 ஆம் நூற்றாண்டில், சார்லஸ் டார்வின், இது ஒரு புரியாத புதிர் என்றும், சாதாரணமான இயற்கைத் தேர்வு மூலம் விளக்குவது கடினம் என்றும் குறிப்பிட்டார். பெண் மயில்கள் பெரிய தோகைகளை கொண்டிருப்பதில்லை. அவை பெரும்பாலும் மந்தமான நிற இறகுகளைக் கொண்டிருக்கின்றன.
மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருந்தாலும் பறக்கும் திறன் கொண்டவை. இந்திய மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது, அங்கு இவை பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவை பாம்புகள், பல்லிகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகளை வேட்டையாடுகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பயன்படுகின்றன.
இந்த பறவை இந்து மற்றும் கிரேக்க புராணங்களில் பரவலாக காணப்படுகின்றது.[5] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் உருவாக்கப்படும் செம்பட்டியலின் குறிப்பின்படி, காங்கோ மயில் இனமானது அழிவாய்ப்பு இனமாகவும், பச்சை மயில் அருகிய இனமாகவும், இந்திய மயில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[6].
மயிலின் வகைகள்
இந்திய மயில்
இந்திய மயில் (பாவோ கிரிசுடேடசு - Pavo cristatus) இந்திய துணைக்கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பறவையினமாகும். இவை இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக இருக்கின்றன. ஆயினும் உலகின் வேறு பல நாடுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இவற்றில் ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும், பச்சையும் கலந்த மிக நீண்ட சிறகுகளையும், கண் போன்ற அமைப்புக்களையும் கொண்ட தோகையையும் கொண்டிருக்கும்.[7][8] பெண் மயில்கள் பெரிய தோகைகளை கொண்டிருப்பதில்லை. அவை பெரும்பாலும் வெள்ளை நிற முகம், பச்சை நிற கீழ் கழுத்து, மற்றும் மந்தமான பழுப்பு அல்லது சாம்பல் நிற இறகுகளைக் கொண்டிருக்கின்றன.[9]
பச்சை மயில்
பச்சை மயில் (பேவோ மியூட்டிக்கஸ் - பாவோ muticus) கிழக்கு மியன்மார் முதல் சாவா தீவு வரையுள்ள தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள வெப்பவலயக் காடுகளில் காணப்படுகின்றது. சாவாவில் காணப்படும் குறிப்பிட்ட துணையினமானது சாவா மயில் எனவும் அழைக்கப்படுகிறது. பச்சை மயில் இனமானது இந்திய மயில் இனத்துடன், மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பச்சை மயில்களின் கழுத்துப் பகுதி பச்சை நிறத்தில் இருப்பதனால், இவை இந்திய மயில்களிலிருந்து வேறுபடுகின்றன.[10]
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது.[11]
காங்கோ மயில்
காங்கோ மயில் (அப்ரோபேவோ - Afropavo காங்கேன்சிசு) காங்கோ ஆற்றை அடிப்படையாக வைத்து உருவான காங்கோ வடிநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவையினமாகும். இவை இந்திய மற்றும் பச்சை மயில் போன்று மிக நீண்ட தோகையைக் கொண்டிருப்பதில்லை.[12]
சொற்பிறப்பியல்
ஆங்கிலத்தில் மயிலின் பலவின்பாற் பெயர் Peafowl ஆகும்.[13] ஆண்பாற் பெயர் Peacock (பீகாக்) ஆகும்.[14] தமிழ் வார்த்தையான தோகை, அரபிய மொழியில் தாவுசு ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்தில் பவு ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பாவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பாவ் எனவும், பின்னர் "பீகாக்" எனவும் மருவியது.
பண்பாடு
பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான இது, 1963 இல் இந்தியாவின் தேசியப் பறவை என அறிவிக்கப்பட்டது.ref name=hbk>Ali, S; Ripley, S D (1980). Handbook of the birds of India and Pakistan. Vol. 2 (2nd ed.). Oxford University Press. pp. 123–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-562063-1.</ref> இந்தியாவில் கோவில் கலை, புராணங்கள், கவிதைகள், நாட்டுப்புற இசை மற்றும் மரபுகளில் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது.[15][16][17][18] பல இந்து தெய்வங்கள் மயில்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. விஷ்ணுவின் அவதாரமான கிருட்டிணன் தலையில் ஒரு மயில் இறகுடன் சித்தரிக்கப்படுகிறார். தமிழ் கடவுளான முருகன் பெரும்பாலும் மயில் வாகனத்தின் மீதமர்ந்தவாறு சித்தரிக்கப்படுகிறார். "இராமாயணத்தில்" தேவர்களின் தலைவன் இந்திரன், ராவணனை தோற்கடிக்க முடியாமல், மயிலின் இறக்கையின் கீழ் தஞ்சமடைந்ததை விவரிக்கிறது.[16][19]
பௌத்த தத்துவத்தில், மயில் ஞானத்தை குறிக்கிறது.[20] மயில் இறகுகள் பல சடங்குகள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மயில் உருவங்கள் இந்திய கோயில் கட்டிடக்கலை, பழைய நாணயங்கள், துணிகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளன மற்றும் பல நவீன கலை மற்றும் பயன்பாட்டு பொருட்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.[21][22] கிரேக்க புராணங்களில் மயிலின் இறகுகளின் தோற்றம் பல கதைகளில் விளக்கப்பட்டுள்ளது.[23][24][25] பல நிறுவனங்கல் மயில் உருவங்களைப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பறவைகள் பெரும்பாலும் பெரிய தோட்டங்களில் காட்சிக்காக வளர்க்கப்பட்டன. இடைக்காலத்தில், ஐரோப்பாவில் வீரர்கள் தங்கள் தலைக்கவசங்களை மயில் இறகுகளால் அலங்கரித்தனர். பல கதைகளில், வில்லாளர்கள் மயில் இறகுகளால் பொறிக்கப்பட்ட அம்புகளைப் பயன்படுத்துகின்றனர். மயில் இறகுகள் வைக்கிங் வீரர்கள் இறந்த பிறகு அவர்களுடன் புதைக்கப்பட்டன.[26] பறவையின் சதை பாம்பு விஷம் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இவற்றின் பல பயன்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மயில் ஒரு பகுதியை பாம்புகள் இல்லாமல் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.[27]
மேற்கோள்கள்
- ↑ "Peacock (bird)". Britannica Online Encyclopedia.
- ↑ "Green Peafowl (Description)". Encyclopedia Of Life. பார்க்கப்பட்ட நாள் 30 January 2018.
- ↑ "The Difference in Peafowls & Peacocks". பார்க்கப்பட்ட நாள் 30 January 2018.
- ↑ "The birds of the genus Pavo and Afropavo of the family Phasianidae". பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2018.
- ↑ "National Symbols". National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 30 January 2018.
- ↑ "IUCN Red List of Threaten species". பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.
- ↑ Whistler, Hugh (1949). Popular handbook of Indian birds (4th ed.). Gurney and Jackson, London. pp. 401–410. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4067-4576-6.
- ↑ Blanford, WT (1898). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Vol. 4. Taylor and Francis, London. pp. 681–70.
- ↑ "Indian peafowl (Pavo cristatus)". Wildscreen. Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.
- ↑ "Green peafowl (Pavo muticus)". Wildscreen. Archived from the original on 2018-02-21. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.
- ↑ "Pavo muticus". The IUCN Red List. பார்க்கப்பட்ட நாள் 30 January 2018.
- ↑ "Congo peafowl (Afropavo congensis)". Wildscreen. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.
- ↑ Kuzmić, Tomislav. "peafowl - EUdict - English>Tamil". www.eudict.com.
- ↑ Kuzmić, Tomislav. "peacock - EUdict - English>Tamil". www.eudict.com.
- ↑ Fitzpatrick J (1923). "Folklore of birds and beasts of India". J. Bombay Nat. Hist. Soc. 28 (2): 562–565. https://biodiversitylibrary.org/page/30113154. பார்த்த நாள்: 21 December 2017.
- ↑ 16.0 16.1 Lal, Krishna (2007). Peacock in Indian art, thought and literature. Abhinav Publications. pp. 11, 26, 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-429-5.
- ↑ Masica, Colin P. (1991). The Indo-Aryan languages. Cambridge language surveys. Cambridge University Press. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-23420-7.
- ↑ Witzel, Michael (2002). Early Loan Words in Western Central Asia: Substrates, Migrations and Trade (PDF). Harvard University. Archived (PDF) from the original on 16 September 2012. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
- ↑ Anonymous (1891). Ramavijaya (The mythological history of Rama). Bombay: Dubhashi & Co. p. 14.
- ↑ Choskyi, Ven. Jampa (1988). "Symbolism of Animals in Buddhism". Buddhist Hiamalaya 1 (1). http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-BH/bh117490.htm. பார்த்த நாள்: 1 June 2010.
- ↑ Rolland, Eugene (1915). Faune populaire de la France. Tome 6. p. 149. Archived from the original on 11 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.
- ↑ Emeneau, M.B (1943). "Studies in the Folk-Tales of India: I: Some Origin Stories of the Todas and Kotas". Journal of the American Oriental Society 63 (2): 158–168. doi:10.2307/594123.
- ↑ Jackson, CE (2006). Peacock. Reaktion Books, London. pp. 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86189-293-5.
- ↑ Empson, RHW (1928). The cult of the peacock angel. HF & G Witherby, London.
- ↑ Springett, BH (1922). Secret sects of Syria and the Lebanon. George Allen & Unwin Ltd., London.
- ↑ Tyrberg T (2002). "The archaeological record of domesticated and tamed birds in Sweden". Acta Zoologica Cracoviensia 45: 215–231. http://www.isez.pan.krakow.pl/journals/azc_v/pdf/45/16.pdf. பார்த்த நாள்: 2 June 2010.
- ↑ "Letter from the Desk of David Challinor, November 2001" (PDF). Smithsonian Institution. Archived from the original (PDF) on 27 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2 June 2010.