100 ரூபாய் பணத்தாள் (இந்தியா)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்திய 100 ரூபாய் பணத்தாள் (Indian 100-rupee banknote (100) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். இந்தப் பணத்தாளானது இந்திய ரிசர்வ் வங்கியால் முதன் முதலில் 1935 இல் இருந்து பணத்தாளாக அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக அச்சிடப்பட்டு வருகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி வரிசை 100 பணத்தாளானது 1996 முதல் புழக்கத்தில் உள்ளது.

முதலில் வெளியான 100 ரூபாய் பணத்தாளில் மன்னர் ஆறாம் ஜார்ஜ்ஜின் சித்திரம் இடம்பெற்றது. 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பணத்தாளில், ஆறாம் ஜார்ஜ்ஜின் உருவப்படத்துக்கு பதிலாக இந்திய தேசிய இலட்சினையில் உள்ள சிங்க உருவத்தின் படம் போடப்பட்டது.[1]

மகாத்மா காந்தி புதிய வரிசை

2016 நவம்பர் 10 அன்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய மறுவடிவமைப்பில் 100 பணத்தாளானது வரவிருக்கும் மாதங்களில், மகாத்மா காந்தி புதிய வரிசையின் ஒரு பகுதியாக வெளியிடப்படும் என்று அறிவித்தது.[2]

மகாத்மா காந்தி வரிசை

வடிவம்

100 பணத்தாளின் மகாத்மா காந்தி வரிசை தாளானது 157 × 73 மிமீ அளவுடையதாகவும், நீலும் -பச்சை நிறத்தில் முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. தாளின் பின்பக்கம் கோயிசா லாவின் காட்சி இடம்பெற்றுள்ளது.

2012 இக்குப் பிறகு, வெளியிடப்பட்ட 100 ரூபாய் பணத்தாளில் புதிய குறியீடு இடம்பெற்றது.[3] 2005 க்கு முன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் 2014 மார்ச்சு 31 முதல் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 சனவரியில் வெளியிட்டது. பின்னர் காலக்கெடுவை 2015 சனவரி 1 வரை நீட்டித்தது. இந்த காலக்கெடு மேலும் 2016 சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.[4]

மொழிகள்

மற்ற இந்திய ரூபாய் நோட்டுகள் போல 100 பணத்தாள்களிலும் 17 இந்திய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம், இந்தியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றிருந்ததன. மொழிகளின் வரிசை பின்வருமாறு: அசாமி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.

ஒன்றிய நிலை அலுவல் மொழிகள்
Language 100
ஆங்கிலம் One Hundred rupees
இந்தி एक सौ रुपये
மாநில நிலை அலுவல் மொழிகள் 15
அசாமி এশ টকা
வங்காளி একশ টাকা
குசராத்தி એક સો રૂપિયા
கன்னடம் ಒಂದು ನೂರು ರುಪಾಯಿಗಳು
காசுமீரி ہَتھ رۄپیہِ
கொங்கணி शंबर रुपया
மலையாளம் നൂറു രൂപ
மராத்தி शंभर रुपये
நேபாளி एक सय रुपियाँ
ஒடியா ଏକ ଶତ ଟଙ୍କା
பஞ்சாபி ਇਕ ਸੌ ਰੁਪਏ
சமசுகிருதம் शतं रूप्यकाणि
தமிழ் நூறு ரூபாய்
தெலுங்கு నూరు రూపాయలు
உருது سو روپیے

மேறோகோள்கள்

  1. "India Paper Money A Retrospect". Republic India Issues. Reserve Bank of India. Archived from the original on 18 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 11 January 2012.
  2. RBI to issue ₹1,000, ₹100, ₹50 with new features, design in coming months
  3. "Issue of ₹100 Banknotes with incorporation of Rupee symbol". RBI. பார்க்கப்பட்ட நாள் 23 January 2012.
  4. "Withdrawal of Currencies Issued Prior to 2005". Press Information Bureau. 25 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.

வார்ப்புரு:இந்திய நாணயங்கள்