1000 ரூபாய் பணத்தாள் (இந்தியா)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்திய 1000 ரூபாய் பணத்தாள்  (Indian 1000-rupee banknote (1000) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். இது  இந்திய ரிசர்வ் வங்கியால் முதன் முதலில் 1938 இல் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, 1946 இல் செல்லாமல் ஆக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1954 இல் மீண்டும் இந்த வரிசை பணத்தாளானது அறிமுகப்படுத்தப்பட்டது. 1978 சனவரி அன்று கணக்கில் வராத பணத்தை ஒழிப்பதற்காக அனைத்து உயர் மதிப்பு நோட்டுகளான 1000, 5000,  10,000 ஆகியவை செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்பட்டன.[1][2]

பணவீக்கம் காரணமாக புழக்கத்தில் உள்ள பணத்தாள்களின் அளவைக் கட்டுப்படுத்த, 2000 நவம்பரில் மகாத்மா காந்தி வரிசையின் ஒரு பகுதியாக, அடல் பிஹாரி வாஜ்பாயி அரசினால்  1000 ரூபாய் பணத்தாள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது;  2016 நவம்பர் 8 அன்று இந்திய பிரதமர்  நரேந்திர மோடியால் கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ளப் பணப் பிரச்சனை ஆகியவற்றுக்கான தீர்வாக இந்த பணத்தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன.

மகாத்மா காந்தி புதிய வரிசை

2016 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி, நிதி அமைச்சகத்தின் ஷக்திகந்த தாஸ், வரவிருக்கும் மாதங்களில் மகாத்மா காந்தி புதிய வரிசையில் புதிய 1000 ரூபாய் பணத்தாள்கள் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.[3]

மகாத்மா காந்தி வரிசை

வடிவம்

1000 பணத்தாளின் மகாத்மா காந்தி வரிசை பணத் தாளானது 177 × 73 மிமீ  அளவில் அம்பர்-சிவப்பு நிறத்தில், முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. பின்பக்கத்தில் எண்ணெய் ரிக்,  செயற்கைக்கோள் மற்றும் எஃகு உருக்காலை ஆகியவற்றின் கலவையான படம் இடம்பெற்றுள்ளது, இவை அனைத்தும் இந்தியப பொருளாதாரம் குறித்த சித்தரிப்புகள் ஆகும்.

2011 இக்குப் பிறகு, வெளியிடப்பட்ட 1000 ரூபாய் பணத்தாளில் புதிய இந்திய ரூபாய்க் குறியீடான சின்னம் இடம்பெற்றது.[4] 2005 க்கு முன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் 2014 மார்ச்சு 31 முதல் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 சனவரியில் வெளியிட்டது. பின்னர் காலக்கெடுவை 2015 சனவரி 1 வரை நீட்டித்தது. இந்த காலக்கெடு மேலும் 2016 சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.[5]

மொழிகள்

மற்ற இந்திய ரூபாய் நோட்டுகள் போல 1000 பணத்தாள்களிலும் 17 இந்திய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம், இந்தியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றிருந்ததன. மொழிகளின் வரிசை பின்வருமாறு: அசாமி,வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி,சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.

ஒன்றிய நிலை அலுவல் மொழிகள்
மொழிகள் 1000
ஆங்கிலம் One thousand rupees
இந்தி एक हज़ार रुपये
மாநில நிலை அலுவல் மொழிகள் 15
அசாமி এহেজাৰ টকা
வங்காளி এক হাজার টাকা
குசராத்தி એક હજાર રૂપિયા
கன்னடம் ಒಂದು ಸಾವಿರ ರುಪಾಯಿಗಳು
காசுமீரி ساس رۄپیہِ
கொங்கணி एक हजार रुपया
மலையாளம்  ആയിരം രൂപ
மராத்தி एक हजार रुपये
நேபாளி एक हजार रुपियाँ
ஒடியா ଏକ ହଜାର ଟଙ୍କା
பஞ்சாபி ਇਕ ਹਜ਼ਾਰ ਰੁਪਏ
சமசுகிருதம் सहस्रं रूप्यकाणि
தமிழ் ஆயிரம் ரூபாய்
தெலுங்கு వెయ్యి రూపాయలు
உருது ایک ہزار روپیے

மேற்கோள்கள்

  1. "Demonetization of higher denomination banknotes". Your Guide to Money Matters. Reserve Bank of India. Archived from the original on 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் 11 January 2012.
  2. "India Paper Money A Retrospect". Republic India Issues. Reserve Bank of India. Archived from the original on 18 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 11 January 2012.
  3. "RBI to issue ₹1,000, ₹100, ₹50 with new features, design in coming months". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 10 November 2016.
  4. "Issue of ₹1000 Banknotes with incorporation of Rupee symbol". RBI. பார்க்கப்பட்ட நாள் 18 November 2011.
  5. "Withdrawal of Currencies Issued Prior to 2005". Press Information Bureau. 25 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.

வார்ப்புரு:இந்திய நாணயங்கள்