1-புளோரோயெக்சேன்
படிமம்:1-Fluorohexane.svg | |
படிமம்:1-fluorohexane-3D-balls.png | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
1-எக்சைல் புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
373-14-8 | |
ChemSpider | 9377 |
EC number | 206-763-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9760 |
| |
பண்புகள் | |
C6H13F | |
வாய்ப்பாட்டு எடை | 104.17 g·mol−1 |
தோற்றம் | Liquid |
அடர்த்தி | 0.8 கி/செ.மீ3 |
உருகுநிலை | −103 °C (−153 °F; 170 K) |
கொதிநிலை | 92–93 °C (198–199 °F; 365–366 K) |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS06 |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-புளோரோயெக்சேன் (1-Fluorohexane) என்பது C6H13F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3(CH2)5F என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். அலிபாட்டிக்கு நிறைவுற்ற ஆலசனேற்ற நீரகக் கரிமங்கள் என்ற குழுவின் உறுப்பினர் எனவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. எக்சைல் புளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1] [2][3]
தயாரிப்பு
எத்திலீன் கிளைக்காலில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் புளோரைடுடன் 1-குளோரோயெக்சேன் அல்லது 1-புரோமோயெக்சேன் சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் 1-புளோரோயெக்சேனைத் தயாரிக்கலாம். [4]
இயற்பியல் பண்புகள்
1-புளோரோயெக்சேன் ஈதர் மற்றும் பென்சீனில் கரையும். நிறமற்ற திரவமாக இது காணப்படுகிறது.
வேதிப்பண்புகள்
செயலூக்கப்பட்ட பாதரசத்துடன் 1-புளோரோயெக்சேன் வினையில் ஈடுபடுகிறது.:[5]
- CH3(CH2)5F + Mg (செயலூக்கம்) -> C6H13MgF
பயன்கள்
இச்சேர்மம் முதன்மையாக கரிம வேதியியல் துறையில் ஒரு வினையாக்கியாக அல்லது கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 1-புளோரோயெக்சேன் இயற்பியல் வேதியியலில் புளோரினேற்றம் பெற்ற ஐதரோகார்பன்களின் இயற்பியல்-வேதியியல் பண்புகளைப் புரிந்துகொள்வதற்கான மாதிரி கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "1-Fluorohexane". spectrabase.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2024.
- ↑ 2.0 2.1 "1-Fluorohexane | CAS 373-14-8 | SCBT - Santa Cruz Biotechnology" (in English). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2024.
- ↑ Dupasquier, Alfredo; Mills, Allen P.; Brusa, Roberto S. (2010). Physics with Many Positrons: Proceedings of the International School of Physics "Enrico Fermi", Course CLXXIV, Varenna on Lake Como, Villa Monastero, 7-17 July 2009 (in English). IOS Press. p. 391. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60750-646-1. பார்க்கப்பட்ட நாள் 6 August 2024.
- ↑ Houben-Weyl Methods of Organic Chemistry Vol. V/3, 4th Edition Fluorine and Chlorine Compounds, Georg Thieme Verlag, 2014, p. 153, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-179994-4
- ↑ Hagen, A. P. (17 September 2009). Inorganic Reactions and Methods, The Formation of Bonds to Halogens (Part 2) (in English). John Wiley & Sons. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-14539-5. பார்க்கப்பட்ட நாள் 6 August 2024.