1-புளோரோநாப்தலீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1-புளோரோநாப்தலீன்
படிமம்:1-fluoronaphthalene.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-புளோரோநாப்தலீன்
வேறு பெயர்கள்
α-புளோரோநாப்தலீன்
இனங்காட்டிகள்
321-38-0 Yes check.svg.pngY
ChemSpider 9078
EC number 206-287-0
InChI
  • InChI=1S/C10H7F/c11-10-7-3-5-8-4-1-2-6-9(8)10/h1-7H
    Key: CWLKTJOTWITYSI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9450
  • C1=CC=C2C(=C1)C=CC=C2F
UNII 0920702UT7வார்ப்புரு:Fdacite
பண்புகள்
C
10
H
7
F
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை −13 °C (9 °F; 260 K)
கொதிநிலை 215 °C (419 °F; 488 K)
insoluble
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
தீப்பற்றும் வெப்பநிலை 65 °C (149 °F; 338 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


1-புளோரோநாப்தலீன் (1-Fluoronaphthalene) என்பது C10H7F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் அரோமாட்டிக்கு சேர்மமான இது நாப்தலீன் வழிப்பெறுதி கரிமபுளோரின் சேர்மமாகக் கருதப்படுகிறது.[1]

தயாரிப்பு

செலக்ட்புளோர் என்ற வர்த்தகப் பெயரால் அழைக்கப்படும் புளோரின் வழங்கியை நாப்தலீனுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் 1-புளோரோநாப்தலீன் உருவாகும்.[2]

பண்புகள்

1-புளோரோநாப்தலீன் என்பது நிறமற்ற ஓர் எரியக்கூடிய நீர்மமாகும். இது தண்ணீரில் கரையாது..[3]

பயன்கள்

1-புளோரோநாப்தலீன் மூவிணைய-பியூடைல்லித்தியம் என்ற இடைநிலை உத்வியுடன் 6-பதிலீடு செய்யப்பட்ட பினாந்திரிடீன்கள் தயாரிக்க பயன்படுகிறது. மனித இரத்தத் தட்டணுக்களில் செரோடோனின் மற்றும் நோர்பைன்பிரைன் உறிஞ்சுதலை தடுக்கும் எல் ஒய்248686 என்ற புதிய ஒரு தடுப்பியை தயாரிக்கவும் இது பயன்படுகிறது.

1-புளோரோநாப்தலீன் செவ்வாய் கோள் அறிவியல் ஆய்வகமான கியூரியோசிட்டி தரையுளவியின் பெட்டிகளில் பொருத்தப்ட்ட கரிம பொருள்கள் சரிபார்க்கும் பொருளின் ஓர் அங்கமாகவும் பயன்படுத்தப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தில் கருவி தொகுப்பில் உள்ள மாதிரி பகுப்பாய்வை அளவீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது பூமியில் இயற்கையில் காணப்படாத ஒரு செயற்கை கரிம சேர்மமாகும்.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "1-Fluoronaphthalene". Sigma Aldrich. sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
  2. Atta-Ur-Rahman (2006). Advances in Organic Synthesis: Modern Organofluorine Chemistry-Synthetic Aspects. Bentham Science Publishers. p. 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-60805-198-6.
  3. "1-FLUORONAPHTHALENE". CAMEO Chemicals. cameochemicals.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
  4. "Sampling System". Jet Propulsion Laboratory. msl-scicorner.jpl.nasa.gov. Archived from the original on 20 March 2009. பார்க்கப்பட்ட நாள் 28 July 2019.
"https://tamilar.wiki/index.php?title=1-புளோரோநாப்தலீன்&oldid=143059" இருந்து மீள்விக்கப்பட்டது