ஹேம மாலினி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹேம மாலினி
Hema malini bhungama1.jpg
மதுராவின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்ஜயந்த் சவுத்திரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஹேம மாலினி ஆர். சக்கரவர்த்தி

16 அக்டோபர் 1948 (1948-10-16) (அகவை 76)[1]
அம்மன்குடி, தமிழ்நாடு, இந்தியா
துணைவர்தர்மேந்திரா (1980–நடப்பில்)
பிள்ளைகள்ஈஷா தியோல்
ஆகனா தியோல்
வேலைநடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி
விருதுகள்பத்மசிறீ (2000)

ஹேம மாலினி ("Hema Malini Chakravarty") (பிறப்பு 16 அக்டோபர் 1948) இந்தியத் திரைப்பட நடிகையும், இயக்குநரும், தயாரிப்பாளரும், நடனக் கலைஞரும் அரசியல்வாதியும் ஆவார்.[2] 1963 இல் நடனப் பெண்மணியாக இது சத்தியம் என்ற திரைப்படத்திலும் 1965இல் நடனப் பெண்மணியாக பாண்டவர் வனவாசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இவர் கதைநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்த சப்னோ கா சௌதாகர் ஆகும்; இதனைத் தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில், முன்னணி நாயகியாக நடித்துள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் தனது கணவரும் திரைப்பட நடிகருமான தர்மேந்திராவுடன் நடித்துள்ளார்; ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாகவும் நடித்துள்ளார்.[3]

துவக்க காலத்தில் "கனவுக் கன்னி" என அறிமுகப்படுத்தப்பட்ட ஹேம மாலினி, 1977இல் அதே பெயருள்ள (டிரீம் கேர்ள்) திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3] நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஹேம மாலினி சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.[4][5][6] 150 திரைப்படங்களுக்கும் கூடுதலாக நடித்துள்ளார்.[4] தனது திரைப்பட வாழ்க்கையில், ஹேம மாலினிக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பதினோரு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்; 1972இல் ஒருமுறை வென்றுள்ளார். 2000இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் இந்திய அரசின் பத்மசிறீ விருதையும் பெற்றுள்ளார்.[7] 2012இல் சேர் பதம்பத் சிங்கானியா பல்கலைக்கழகம் ஹேம மாலினிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.[8] இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் அவைத்தலைவராக பணியாற்றியுள்ளார். 2006இல் சோபோரி இசை மற்றும் நிகழ்த்து கலை அகாதமியிலிருந்து விடாஸ்டா விருது பெற்றுள்ளார்.

2003 முதல் 2009 வரை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[9] 2014இல் மதுரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல அறக்கட்டளைகள் மற்றும் சமூகத் தாபனங்களுடன் ஈடுபாடு கொண்டுள்ளார்.

இளமையும் குடும்பமும்

ஹேம மாலினி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் அம்மன்குடி என்னுமிடத்தில் தமிழ்-பேசும் ஐயங்கார் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் [10] பிறந்தார். தந்தை V.S.R. சக்கரவர்த்தி, தாயார் ஜெயா சக்கரவர்த்தி. இவரது அன்னை திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

சென்னையின் ஆந்திர மகிள சபாவில் வரலாற்றுப் பிரிவில் கல்வி கற்றார்.[11] பின்னர் பள்ளியிறுதிக் கல்வியை தில்லியின் மந்திர் மார்கிலுள்ள பள்ளியில் முடித்தார்.[12]

அரசியல் பணிவாழ்வு

1999இல் ஹேம மாலினி பஞ்சாபின் குர்தாசுபூர் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் இந்திப்பட நடிகர் வினோத் கண்ணாவிற்காக பரப்புரையில் ஈடுபட்டார்.[13] 2004ஆம் ஆண்டு பெப்ரவரியில் அலுவல்முறையாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[13] 2003 முதல் 2009 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 2010இல் பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[14] 2014இல் மக்களவை பொதுத் தேர்தலில் மதுராவிலிருந்து 3,30,743 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார்.[13][14][15][16]

சமூக இயக்கங்களில் பங்கேற்பு

ஹேம மாலினி விலங்குரிமை அமைப்பான விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் இந்தியக் குழுவின் ஆதரவாளர். 2009இல் மும்பையின் நெருக்கடிமிக்க சாலைகளில் குதிரை வண்டிகள் இயக்கப்படுவதை தடை செய்ய மும்பை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதினார்.[17] 2011இல் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு காளையை அடக்கும் போட்டிகளை (ஏறுதழுவல்) தடை செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதினார்.[18][19] அவ்வாண்டின் "வருடத்து பீட்டா நபராகத்" தேர்ந்தெடுக்கப்பட்டார்.[20] தாவர உணவாளராக "எனது உணவு விருப்பங்கள் புவிக்கும் விலங்குகளுக்கும் உதவுவதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது" எனக் கூறியுள்ளார்.[21]

மேற்கோள்கள்

  1. "rediff.com: A dream called Hema Malini". Rediff.com. 16 October 1958. http://in.rediff.com/movies/2003/oct/16sd1.htm. பார்த்த நாள்: 14 June 2011. 
  2. Hemamalini, ever dream girl turned 65. cinemanewstoday.com.
  3. 3.0 3.1 A dream called Hema Malini. Rediff.com. Accessed 24 September 2009.
  4. 4.0 4.1 "Top Actresses. Box Office India. Accessed 8 January 2008." இம் மூலத்தில் இருந்து 2 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121202231509/http://boxofficeindia.com/cpages.php?pageName=top_actress. 
  5. Friday Review Chennai / Tribute : Bollywood's macho man bids goodbye. பரணிடப்பட்டது 2009-05-06 at the வந்தவழி இயந்திரம் The Hindu 1 May 2009 Accessed 14 June 2011.
  6. Top Box Office Draws of Indian Cinema.[தொடர்பிழந்த இணைப்பு] IBOS. Accessed 24 September 2009.
  7. Padma Vibhushan, Padma Bhushan, Padma Shri awardees. பரணிடப்பட்டது 2010-04-14 at the வந்தவழி இயந்திரம் The Hindu 27 January 2000 Accessed 14 June 2011.
  8. Here comes Dr. Hema Malini! தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 2 October 2012. Accessed 2 October 2012.
  9. Smt. Hema Malini, Member of Parliament (Rajya Sabha)- Bio Data Press Information Bureau of India. பரணிடப்பட்டது 2008-06-22 at the வந்தவழி இயந்திரம்
  10. Hema Malini. Living Media International Limited 2004 p23.
  11. My Fun Days. பரணிடப்பட்டது 2013-09-06 at the வந்தவழி இயந்திரம் Telegraph India 29 June 2011. Accessed 6 July 2011.
  12. Detailed Profile, Smt. Hema Malini, Members of Parliament (Rajya Sabha), Who's Who, Government: National Portal of India. India.gov.in Accessed 6 July 2011.
  13. 13.0 13.1 13.2 Hema Malini joins BJP. பரணிடப்பட்டது 2004-04-03 at the வந்தவழி இயந்திரம் The Hindu 20 February 2004 Accessed 14 June 2011.
  14. 14.0 14.1 Karnataka News : BJP picks Hema Malini for RS. பரணிடப்பட்டது 2011-02-26 at the வந்தவழி இயந்திரம் The Hindu 19 February 2011 Accessed 14 June 2011.
  15. Hema Malini makes dream debut in Mathura. Zeenews 2014.
  16. Constituency wise. பரணிடப்பட்டது 2014-05-29 at the வந்தவழி இயந்திரம் ECI results.
  17. Hema Malini campaigns for being vegetarian பரணிடப்பட்டது 2016-01-06 at the வந்தவழி இயந்திரம் Zee News 8 October 2013
  18. Ban Tamil Nadu's jallikattu: Hema Malini. Times of India 4 July 2011.
  19. Hema Malini urges ban on Tamil Nadu's Jallikattu.[தொடர்பிழந்த இணைப்பு] IBN Live 1 July 2011.
  20. Hema Malini named PETA Person of the Year. Deccan Herald 19 December 2011.
  21. Hema Malini stars in PETA ad. Times of India 9 October 2013.

மேலாய்விற்கு

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஹேம_மாலினி&oldid=23529" இருந்து மீள்விக்கப்பட்டது