ஹர்ஷவர்தன் ராணே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹர்ஷ் வர்தன், ஹர்ஷவர்தனர் ஆகியோருடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ஹர்ஷவர்தன் ராணே
படிமம்:Harshvardhan Rane graces Vogue Beauty Awards 2017.jpg
பிறப்புதிசம்பர் 16, 1983 (1983-12-16) (அகவை 41)
ராஜமுந்திரி
ஆந்திரப் பிரதேசம்[1]
மற்ற பெயர்கள்ஹர்ஷா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்று வரை

ஹர்ஷவர்தன் ராணே (Harshvardhan Rane, பிறப்பு: டிசம்பர் 16, 1983), தமிழ், தெலுங்கு மொழித் திரையுலக நடிகர் ஆவார். இவர் துள்ளி எழுந்தது காதல், நா இஷ்டம், நீ எங்கே என் அன்பே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை

2008ஆம் ஆண்டு சப் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லெப்ட் ரைட் லெப்ட் என்ற தொடரின் 2ஆம் பாகத்தில் ரம்மி கவுர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு தகிட தகிட என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் அக்கினேனி நாகார்ஜுனா, அனுசுக்கா செட்டி, பூமிகா சாவ்லா குணச்சித்திர வேடங்களில் நடித்தனர். இந்த திரைப்படம் தமிழ் மொழியில் துள்ளி எழுந்தது காதல் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

2012ஆம் ஆண்டு அவுனு என்ற திரைப்படத்தில் நடிகை பூர்ணாவுடன் ஜோடியாக நடித்தார். இதே ஆண்டில் ராணா டக்குபாதி, ஜெனிலியா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்த நா இஷ்டம் என்ற திரைப்படத்தில் கிஷோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு பிரேமா இஷ்க் காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

2014ஆம் நடிகை வித்யா பாலன் நடித்த கஹானி என்ற ஹிந்தி மொழித் திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளில் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து கீதாஞ்சலி, மாயா, பிரதர் ஒப் பொம்மாலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு பாத்திரத்தில் குறிப்புகள்
2010 துள்ளி எழுந்தது காதல் ஸ்ரீதர் (ஸ்ரீ)
2012 அவுனு ஹர்ஷா
2012 நா இஷ்டம் கிஷோர்
2013 பிரேமா, இஷ்க், காதல் ரந்தீர் / ராண்டி
2014 நீ எங்கே என் அன்பே
2014 கீதாஞ்சலி குணச்சித்திர வேடம்
2014 மாயா சித்தார்த் வர்மா
2014 பிரதர் ஒப் போம்மளி ஹர்ஷா

சின்னத்திரை

ஆண்டு தலைப்பு பாத்திரத்தில் சேனல்
2008 லேப்ட் ரைட் லேப்ட் ரம்மி கவுர் சப் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

  1. "Interview With Harshavardhan Rane". Business Of Tollywood. July 1, 2013. Archived from the original on 2014-05-25. பார்க்கப்பட்ட நாள் 2014-05-25.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஹர்ஷவர்தன்_ராணே&oldid=22232" இருந்து மீள்விக்கப்பட்டது