ஹரிணி ரவி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹரிணி ரவி
Hariniravi-200pix.jpg
இயற் பெயர் ஹரிணி
பிறப்பு திசம்பர் 20, 1994 (1994-12-20) (அகவை 30)
இந்தியா சென்னை,
வேறு பெயர் பேபி ஹரிணி
தொழில் பாடகர்
பெற்றோர் வி. வி. ரவி, விசாலம் ரவி

ஹரிணி ரவி (Harini Ravi, பிறப்பு: திசம்பர் 20, 1994) ஒரு பாடகராகவும் குரல் வழங்குனராகவும் (Dubbing Artiste) அறியப்படுகின்றார். இவர் வயலின் இசைக் கலைஞர் வி. வி. ரவி மற்றும் குரல் வழங்குனர் விசாலம் ரவி ஆகியோரின் மகள்.

இளமைப்பருவம்

ஹரிணி ரவி 1994, டிசம்பர் 20 இல் சென்னை நகரில் பிறந்தார். சென்னை மைலாப்பூரில் உள்ள சர் சிவசுவாமி கலாலயா பள்ளியில் +2 படிப்பை முடித்தார்.

பள்ளியளவில் இவர் இசைத்துறை, விளையாட்டு, ஓவியக்கலை, பகவத் கீதைப் பாராயணம் போன்ற துறைகளில் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.

பாடகர்

ஹரிணி ரவி 6-ம் வயதில் தனது முதல் குரல் வழங்கினார். அதன் பிறகு 2000-க்கும் மேற்பட்ட விளம்பர குறும்படங்களுக்கு குரல் வழங்கியுள்ள ஹரிணி இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர், டி. இமான், கே. பாக்யராஜ், தீனா, விஜய் ஆன்டணி மற்றும் கவி பெரிய தம்பி போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் சேர்ந்திசையிலும் (கோரசிலும்) பாடியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், கண்ட நாள் முதல் திரைப்படத்தின் தலைப்பு பாடலையும் மைனா திரைப்படத்தில் வரும் கிச்சு கிச்சு தாம்பூலம் போன்ற பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

பாடிய பாடல்கள்

பாடல் படம் ஆண்டு
சிக்கு சிக்கு பூம் பூம் மாசிலாமணி 2009
கிச்சு கிச்சு தாம்பூலம் மைனா 2010
கொத்தவரங்கா ஐவர் 2011
மண்வாசம் முத்துக்கு முத்தாக 2011
சுட்டி பெண்ணே உச்சிதனை முகர்ந்தால் 2011
நான் சார்லி சாப்லின் பொண்ணு சாப்லின் சாமந்தி 2012

ஜெயா தொலைக்காட்சியின் ராகமாலிகா, சன் தொலைக்காட்சியின் சப்த சுவரங்கள் நிகழ்ச்சியிலும் பொதிகையின் ஆஹா பாடலாம் ஆகிய நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று பாடியுள்ளார். யுனிசெப் அமைப்புடன் இணைந்து நலந்தா-வே தயாரித்து தமிழக ஆளுநர் திரு. சுர்ஜித் சிங் பர்னாலாவால் வெளியிடப்பட்ட ஷவுட் இட் அவுட் என்ற ஆல்பத்திலும் இவர் பாடியுள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஹரிணி_ரவி&oldid=9131" இருந்து மீள்விக்கப்பட்டது