வேற்றுமை (தமிழ் இலக்கணம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெயர்ச்சொற்கள் உருபு ஏற்று வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமை எனப்படும்.[1]

வேற்றுமை - பெயர்கள்

வேற்றுமைகள் அவ்வுருபுகளால் பெயர் பெறுகின்றன.
அவை,

  1. எழுவாய் வேற்றுமை (முதல் வேற்றுமை)
  2. 'ஐ' வேற்றுமை -(இரண்டாம் வேற்றுமை)
  3. 'ஆல்' வேற்றுமை -(மூன்றாம் வேற்றுமை)
  4. 'கு' வேற்றுமை -(நான்காம் வேற்றுமை)
  5. 'இன்வேற்றுமை -( ஐந்தாம் வேற்றுமை)
  6. 'அதுவேற்றுமை -( ஆறாம் வேற்றுமை)
  7. 'கண்வேற்றுமை -( ஏழாம் வேற்றுமை)
  8. 'விளிவேற்றுமை -(எட்டாம் வேற்றுமை)

எனப்பெயர் பெறும்.
எழுவாய் வேற்றுமை பெயர் மாத்திரையாய் தோன்றி நிற்கும். அவ்வெழுவாய் (பெயர்) 'ஐ' முதலிய ஆறு வேற்றுமைகளுக்குரிய உருபுகளையும் ஏற்று நிற்கும்.

வகைப்பாடு

தமிழில் எட்டு வேற்றுமைகள் உள்ளதாக வகைப்பாடு ஒன்று உண்டு.

        "ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
         வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை"
                                                     - நன்னூல் - 291

அவை பின் வருவன:

முதலாம் வேற்றுமை/எழுவாய் வேற்றுமை

"பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது எழுவாய் எனப்படும்." எந்த உருபும் சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.

எ.கா: கண்ணகி வழக்கை உரைத்தாள்.

இரண்டாம் வேற்றுமை/செயப்படுபொருள் வேற்றுமை

பெயர்ச் சொல் ஐ என்ற உருபால் உருபேற்றி அமையும் போது அஃது இரண்டாம் வேற்றுமை எனப்படும். "யாரை அல்லது எதை என்னும் கேள்விக்கு விடையாக அமைவதுதான் செயற்படுபொருள். இரண்டாம் வேற்றுமை செயற்படுபொருளை உணர்த்துவதால், இதைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் சொல்கிறோம்."

எ.கா: கண்ணன் நீதியை உரைத்தான்.

மூன்றாம் வேற்றுமை (கருவி/துணை வேற்றுமை)

ஆல், ஆன். ஒடு, ஓடு, உடன், கொண்டு ஆகிய உருபுகள் மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

எ.கா: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். வள்ளியோடு போ.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. கற்ற கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ன செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்

ஐந்தாம் வேற்றுமை

காதலியின் கண்கள் மிக அழகானது

கண்ணின் கடை பார்வை கன்னியர் காட்டி விட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்

ஆறாம் வேற்றுமை

  • ஆறாம் வேற்றுமை - உருபு - அது ஆது, அ
  • வாழையது வாடியது வானம் அது பொய்த்தது
  • பூவாது காய்ப்பது பலா மரம்
  • மணந்த பெண் அழகானவள்

ஏழாம் வேற்றுமை

எட்டாம் வேற்றுமை

வேற்றுமை உருபுகள்

பெயர்ப் பொருளை வேற்றுமைப்படுத்தும் அல்லது பெயரில் பொருள் திரிபினை உணர்த்தும் வடிவமே "வேற்றுமை உருபு" என வழங்கப்படும். இவ்வேற்றுமை உருபுகள் அசையாகவும் சொல்லாகவும் வரும். அசையால் வருவன "அசையுருபு" என்றும் சொல்லால் வருவன "சொல்லுருபு" என்றும் கூறப்படுகின்றன.

என்பது வேற்றுமை உருபுகள் பற்றிய நூற்பாவகும்.

வேற்றுமை உருபுகளை ஏற்காத பெயர்கள்

'நீர்' என்ற முன்னிலைப்பெயர் 'நும்' எனத் திரிந்தும் , 'யான்' என்ற தன்மை ஒருமைப் பெயர் 'என்' எனத்திரிந்தும் வேற்றுமை உருபுகளை ஏற்கும்.
சான்று:

  • நீர்+ஐ= நும்+ ஐ= நும்மை. நுமக்கு, நும்மால், நும்மின்,நுமது போன்று.
  • யான்+ஐ=என்+ஐ=என்னை, எனக்கு, என்னால், என்னின், எனது போன்று

'நீயிர்', 'நீவீர்', எனும் முன்னிலைப் பெயர்களும்; 'நான்' எனும் தன்மைப் பெயரும் வேற்றுமை உருபுகளை ஏற்கா.

வகைப்பாட்டு முரண்

வகைப்பாடு தமிழில் ஒழுங்கான ஒரு நெறிமுறையைப் பின்பற்றியுள்ளது.

எனினும் முரண்பட்டிருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். இது மொழிவழக்கை ஆராயாமல், இலக்கண நூல்களை ஆராய்ந்து கண்ட முடிபு.

மேலே குறிப்பிட்டுள்ள எட்டு வேற்றுமைகள் சமக்கிருத இலக்கணத்தை ஒட்டி தமிழ் இலக்கணத்தை மாற்றியமைத்ததால் வந்துள்ள செயற்கையான அமைப்பு என்று அண்மைய இலக்கணவியலாளர்கள் கருதுகின்றனர். தமிழ் மொழி இயல்பை ஒட்டியும் இலக்கண மரபின் படியும் வேற்றுமை உருபுகள் ஒவ்வொன்றையுமோ அவற்றின் தொகுதிகளையோ தனித்தனி வேற்றுமையாகக் கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கருத்து.[3][4]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-07-18. பார்க்கப்பட்ட நாள் 2006-09-04.
  2. நன்னூல். வேற்றுமையியல்-292.
  3. Zvelebil, K. V. (Apr. - Jun., 1972). "Dravidian Case-Suffixes: Attempt at a Reconstruction". Journal of the American Oriental Society (American Oriental Society) 92 (2): 272–276. doi:10.2307/600654. http://www.jstor.org/stable/600654. பார்த்த நாள்: 2010-05-03. "The entire problem of the concept of 'case' in Dravidian will be ignored in this paper. In fact, we might posit a great number of 'cases' for perhaps any Dravidian language once we departed from the familiar types of paradigms forced upon us by traditional, indigenous and European grammars, especially of the literary languages. It is, for instance, sheer convention based on Tamil grammatical tradition (influenced no doubt by Sanskrit) that, as a rule, the number of cases in Tamil is given as eight.". 
  4. Harold Schiffman, "Standardization and Restandardization: the case of Spoken Tamil", Language in Society 27:3 (1998) pp. 359–385 and esp. pp.374–375.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

  1. வேற்றுமையியல் தொல்காப்பிய மூலம், செய்தி
  2. எழுவாய் வேற்றுமை
  3. இரண்டாம் வேற்றுமை
  4. மூன்றாம் வைற்றுமை
  5. நான்காம் வேற்றுமை
  6. ஐந்தாம் வேற்றுமை
  7. ஆறாம் வேற்றுமை
  8. ஏழாம் வேற்றுமை