மூன்றாம் வேற்றுமை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மூன்றாம் வேற்றுமை என்பது பெயர்ச்சொல்லின் பொருளை கருவியாகவும் கருத்தாகவும்(வினை முதல்) உடனிகழ்வாகவும் வேறுபடுத்தும் வேற்றுமை ஆகும்

மூன்றாம் வேற்றுமை உருபுகள்

மூன்றாம் வேற்றுமை உருபுகள்
  1. ஆல்
  2. ஆன்
  3. ஒடு
  4. ஓடு என்பனவாகும்.

"ஆல்","ஆன்" என்ற உருபு கருவிப்பொருளுக்கும் கருத்தாப் பொருளுக்கும்: "ஒடு", "ஓடு" எனும் உருபுகள் உடனிகழ்ச்சி பொருளுக்கும் பெரும்பாலும் உரியனவாய் வரும்.

கருவிப்பொருள்

கருவி என்பது பொருளை செய்வதற்கு துணை செய்யும்.

சான்று:
"அரிவாளால் வெட்டினான்."
"அறத்தான் வருவதே இன்பம்."
கருவி 

என இருவகைப் படும்.

முதற்கருவி

முதற்கருவியாவது செயலாக மாறி அதனின்று வேறுபடாமல் நிற்கும்.

சான்று:

"மண்ணால் குடத்தை வனைந்தான்"

மண் என்பது இங்கு முதற்கருவி.

துணைக்கருவி

துணைக்கருவியாவது முதற்கருவி செயல்படும் வரை அதற்குத்துனையாய் நின்று, பின்பு பிரிவது.
சான்று:

"தண்டச் சக்கரங்களாற் குடத்தை வனைந்தான்."

தண்டச் சக்கரங்கள் என்பது இங்கு துணைக் கருவியாகும்.

கருத்தாப் பொர

உடனிகழ்ச்சிப் பொருள்

வினை கொண்டு முடிகிற பொருளை தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும். சான்று:

"தாயொடு சேயும் வந்தாள்"]

இத்தொடரில் "சேய்" என்பது வினை கொண்டு முடிகிற பொருள்; "வருதல்" என்பது தொழில். அத்தொழிலைத் தன்னிடத்தும் உடன் நிகழ்த்துகிற பொருள் "தாய்"; எனவே இது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.

சொல்லுருபுகள்

சொல்லாக நின்று பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவன சொல்லுருபு எனப்படும். மூன்றாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்: கொண்டு, உடன் ஆகியன.
சான்று:

"வாள்கொண்டு வெட்டினான்." - கொண்டு என்ற சொல்லுருபு கருவிப்பொருளுக்கு வந்தது.
"ஆசிரியருடன் மாணவன் வந்தான்." - உடன் என்ற சொல்லுருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.

குறிப்புகள்

  1. நன்னூல். வேற்றுமையியல். - 297.

உசாத்துணை

வெளிப் பார்வை

"https://tamilar.wiki/index.php?title=மூன்றாம்_வேற்றுமை&oldid=13518" இருந்து மீள்விக்கப்பட்டது