பெயர்ச்சொல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.[1] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்

என ஆறு வகைப்படும்.[2] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.

"பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது".[3]

தொல்காப்பிய விளக்கம்

நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ் அறுபொருள் [4] 5

நன்னூல் விளக்கம்

'இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே' [5]

எடுத்துக்காட்டுகள்

பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் பதிலிடு பெயர் அல்லது மாற்றுப் பெயர் எனப்படுகின்றது. நான், நீ, அவன், அவள் போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, மூவிடப் பெயர்கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம்.

மூவிடப் பெயர்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், ஒருமைப் பெயர்களாகவும் பன்மைப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம்.

தன்மை : நான், நாங்கள். முன்னிலை : நீ, நீர், தாங்கள். படர்க்கை : அவன், அவள், அவர்கள், அது, அவை.

தன்மை ஒருமை : நான். தன்மை பன்மை : நாங்கள்.

முன்னிலை ஒருமை : நீ, தம். முன்னிலை பன்மை : நீர், தாங்கள்.

படர்க்கை ஒருமை : அவன், அவள், அது. படர்க்கை பன்மை : அவர்கள், அவை.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "பெயர்ச்சொல்". அகரமுதலி. பார்க்கப்பட்ட நாள் 03 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. மதுமதி (13 மே 2012). "பெயர்ச்சொல் வகையைக் கண்டறிதல்". மதுமதி.காம். பார்க்கப்பட்ட நாள் 03 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. செவல்குளம் ஆச்சா புலவர் அ.சா. குருசாமி (2002). சுராவின் எளிய நடையில் தமிழ் இலக்கணம். சுரா புக்ஸ் பிரைவேட் லிமிடெட் 1620 , ' ஜே ' பிளாக் , 16 - வது பிரதான சாலை , அண்ணா நகர் , சென்னை -600 040.
  4. தொல்காப்பியம் 2 வினையியல் 37
  5. நன்னூல் - 275
"https://tamilar.wiki/index.php?title=பெயர்ச்சொல்&oldid=13485" இருந்து மீள்விக்கப்பட்டது