வீ. அரசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வீ. அரசு
வீ. அரசு
இயற்பெயர்/
அறியும் பெயர்
வீ. அரசு
பிறந்ததிகதி 15 பெப்ரவரி 1954 (1954-02-15) (அகவை 70)
பிறந்தஇடம் வடக்கூர்,
தஞ்சாவூர் மாவட்டம், மதராசு மாநிலம்
(தற்போது தமிழ்நாடு), இந்தியா
பணி எழுத்தாளர், ஆய்வாளர்
தேசியம் தமிழர்
குடியுரிமை இந்தியர்
கல்வி முதுகலை பட்டம்
பெற்றோர் மா. வீராசாமி
சிவபாக்கியம்

வீ. அரசு (V. Arasu; பிறப்பு - 15 பெப்ரவரி 1954) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், முன்னாள் பேராசிரியர், மற்றும் தமிழறிஞர் ஆவார்.

பிறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூரில் 15 பிப்ரவரி 1954 அன்று சிவபாக்கியம் - மா.வீராசாமி இணையருக்கு மகனாகப் பிறந்த இவரின் இயற்பெயர் ராஜூ.

கல்வி

பூண்டி கல்லூரியில் முதுகலையும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும் பெற்றார். 1984-இல் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தார்.[1]

பணி

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[2] நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், கா. சிவத்தம்பி, க. கைலாசபதி உள்ளிட்ட பல முன்னோடி ஆய்வாளர்களின் மரபில் தமிழாய்வில் பண்பாட்டு ஆய்வுகளுக்கு ஊக்கமளித்து வருபவர்.[1]

கல்விப்பின்புலம், ஆராய்ச்சி நெறிமுறைகள், ஆசிரியப் பணியில் 30 ஆண்டு அனுபவம், தற்காலப் புனைவுகள், தனித்த ஆளுமைகள், அயலகத் தமிழ் இலக்கியங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட துறைகள், குறிப்பிடத்தக்க தனித்த ஆளுமைகளின் ஆக்கங்களை ஒட்டுமொத்தமாக கவனப்படுத்துதல் என்ற நிலைகளில் இவரது பங்களிப்பு அமைகிறது.[1][3]

நூல்கள்

கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல நூல்களையும், கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.[கு 1]

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
2002 வ .உ. சி. நூல் திரட்டு புதுமைப்பித்தன் பதிப்பகம்
2004 மயிலை சீனி. வேங்கடசாமி: இந்திய இலக்கியச் சிற்பிகள் சாகித்திய அகாதமி [3]
2006 சிறுபத்திரிக்கை அரசியல் கங்கு வரிசை வெளியீடு [3]
2011 புதுமைப்பித்தன் கதைகள், இதழ்வழிப் பதிப்பு முழுத்திரட்டு அடையாளம், திருச்சி [3]
2012 தமிழியல் கல்வி குறித்த உரையாடல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
சங்க நூல்களின் காலம்
சித்தர் மரபு: நவீன சித்து விளையாட்டுகள்
வேலை நிறுத்தம், 1937 முதல் 1939 வரை

(ஜனசக்தி இதழில் வெளியான தலையங்கங்களின் தொகுப்பு )

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் நூறு அடையாளம், திருச்சி [3]
சங்க இலக்கியம்: பன்முக வாசிப்பு மாற்று வெளியீட்டகம்,

சென்னை [3]

2013 பத்தொன்பதாம் நூற்றாண்டில்

தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு கட்டுரைத்தொகுப்பு
ச.வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு வரலாறும் இலக்கிய வரலாறும்
இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு அடையாளம் பதிப்பகம், சென்னை
மயிலை. சீனி. வேங்கடசாமி நூற்களஞ்சியம்: 20 தொகுதிகள் தமிழ் மண், சென்னை [3]
2016 விந்தன் உலகம் விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை
இது என் வாழ்நாட் பணி : பாவேந்தர் இளவரசு அவர்களின் பாவேந்தப் பயணம் தமிழ் மண், சென்னை
2021

(பிப்)

ஒற்றைப்பண்பாடு எனும் வன்முறை : கீழடி அகழ்வாய்வு- தமிழ்ப்பண்பாடு ஆய்வுரைகள்

(குறுநூல் வடிவில்)

தடாகம், சென்னை [4][5]
வ. உ. சி.எனும் அரசியல் போராளி : தமிழ்ச்சூழல் - வ. உ. சி
தமிழக முப்பெரும் கவிஞர் மரபில் தமிழ்ஒளி :

தமிழ் மரபுக் கவிதை-வரலாறு

இலத்தீன் அமெரிக்க ஆக்கங்கள் : தமிழ்ச்சூழல்-அமரந்தா-மொழியாக்கம்
இருநூற்றாண்டு அச்சுப்பண்பாடு...இதழ்கள்
சென்னை இலௌகிக சங்கம் : தமிழ்ச்சூழல்-நாத்திக அமைப்பு
தோழர் ம. சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர்
அண்ணாவி இளைய பத்மநாதன் : தமிழ்ச்சூழல் - சிலப்பதிகார அரங்கத்திறம்
சோவியத் புரட்சியும் தமிழ்ச்சமூகமும்
ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும் : தமிழ் இசை-வரலாறு
? மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தமிழியல் ஆய்வு (சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு) இளங்கணி பதிப்பகம்,

சென்னை [6]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 வகுப்பறைக்கு செல்வதே நிறைவான பணி, பேராசிரியர் வீ.அரசு நேர்காணல், தி இந்து, 28 டிசம்பர் 2013
  2. பேராசிரியர் முனைவர் வீ.அரசுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, விடுதலை, 29 ஏப்ரல் 2014[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 தமிழியல் ஆய்வு வெளி, வீ அரசு : ஆசிரியம்-ஆய்வு, அ.மோகனா, சந்தியா பதிப்பகம், சென்னை, 2016
  4. குறுநூல் வடிவில் வீ.அரசு ஆய்வுரைகள், இந்து தமிழ் திசை, 2 மார்ச் 2021
  5. வீ. அரசு உரை - பத்து குறுநூல்கள், V. Arasu speech on 'Tamil samooga varalaaru' 10 books launch 2021
  6. "பேராசிரியர் வீ. அரசு தொகுத்த‘மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்’ - ஓர் அறிமுகம், கீற்று" இம் மூலத்தில் இருந்து 2020-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200307083800/http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-feb2015/28158-2015-03-31-08-22-42. 

குறிப்புகள்

  1. இவருடைய ஆய்வு நூல்கள், சிறு நூல்கள், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புகள், ஆய்விதழ்களில் வெளியான கட்டுரைகள், ஆங்கிலக் கட்டுரைகள்,ஆய்வுப்பதிப்பு நூல்கள் பற்றிய விவரங்களை தமிழியல் ஆய்வு வெளி, வீ அரசு : ஆசிரியம்-ஆய்வு, அ.மோகனா, சந்தியா பதிப்பகம், சென்னை, 2016 என்ற நூலில் பின்னிணைப்பு பக்கம் 197 முதல் 207 வரை காணலாம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வீ._அரசு&oldid=5843" இருந்து மீள்விக்கப்பட்டது