விடாமுயற்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விடாமுயற்சி
Vidaa Muyarchi
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்மகிழ் திருமேனி
தயாரிப்புசுபாஸ்கரன் அல்லிராஜா
கதைமகிழ் திருமேனி
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவு
படத்தொகுப்புஎன். பி. சிறீகாந்த்
கலையகம்லைக்கா தயாரிப்பகம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்பது மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும்.[1] லைகா புரொடக்சன்சு பதாகையின் கீழ் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

முதன்மைப் புகைப்படக் காட்சி அக்டோபர் 2023 இல் தொடங்கியது. தற்போது பெரும்பாலும் அசர்பைஜானில் படமாக்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

நடிகர்கள்

தயாரிப்பு - வளர்ச்சி

மார்ச்சு 2022 இல், நேர்கொண்டா பார்வை, வலிமை, துணிவு, திரைப்படங்களுடன் பெயரிடப்படா திரைப்படம் ஒன்றிற்குப் பிறகு எச். வினோத்துடன் அஜித் தொடர்ந்து மூன்று திரைப்படங்களுக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்தார். விக்னேசின் வழக்கமான இசையமைப்பாளர் அனிருத் இரவிச்சந்திரன் என்று கூறப்படுகிறது.[2] செய்திகள் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு இத்திட்டத்தை விக்னேஷ் உறுதிப்படுத்தினார். 2019 இல் தான் திரைக்கதையை விவரித்ததில் நடிகர் அதில் ஈர்க்கப்பட்டதை அவர் வெளிப்படுத்தினார். இருவரும் தங்கள் முந்தைய பணிகளை முடித்தவுடன் விரைவில் தயாரிப்பு தொடங்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுபாஸ்கரன் அல்லிராஜா லைகா புரொடக்சன்சு நிதியுதவி அளித்தது. இது இயக்குநரின் நானும் ரவுடி தான் (2015) திரைப்படத்தை விநியோகித்தது.[3] நிறுவனம் 2022 மார்ச்சு 18 அன்று ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டு இத்திட்டத்தை உறுதிப்படுத்தியது. திரைப்படம் ஏ. கே 62 என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டது.[4]

இருப்பினும், 2023 சனவரியின் பிற்பகுதியில், முன் தயாரிப்பை முடிக்க கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வழங்கப்பட்டதாகவும், இறுதித் திரைக்கதை வேலைகளால் அஜித்தை ஈர்க்கத் தவறிவிட்டதாகவும் இயக்குநர் விக்னேஷ் கூறினார். 2022 இல் வெளிவந்த கலகத் தலைவன் திரைப்படத்தை இயக்கிய மகிழ் திருமேனி நடிகர் அஜித்தைக் கவர்ந்தார். புதிய திரைக்கதையுடன் எழுதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.[5] மே 1 அன்று, அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, விக்னேசுக்குப் பதிலாக மகிழ் திருமேனி தயாரிப்பாளராக அறிவிக்கப்பட்டார். அனிருத் ரவிச்சந்திரன் இயக்குநருடன் தனது முதல் ஒத்துழைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, படத்தொகுப்பாளர் என். பி. சிறீகாந்த் ஆகியோர் முன்பு இயக்குநருடன் பணியாற்றிய பின்னர் தக்கவைக்கப்பட்டனர். படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, விடாமுயற்சி, அதே நாளில் அறிவிக்கப்பட்டது.[6] அசர்பைஜானில் படப்பிடிப்பின் போது கலை இயக்குனர் மிலன் இறந்தார்.[7]

நடிகர்கள்

ஜி (2005) கிரீடம் (2007), மங்காத்தா (2011) என்னை அறிந்தால் (2015) திரைப்படங்களுக்குப் பிறகு ஐந்தாவது தடவையாக அஜித்துக்கு இணையாக திரிசா, கதாநாயகியாக நடித்துள்ளார்.[8] மங்காத்தா திரைப்படத்திற்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த அர்ஜுன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.[9][10]

படப்பிடிப்பு

முதன்மை புகைப்படம் எடுத்தல் 2023 அக்டோபர் 4 அன்று அசர்பைஜானில் தொடங்கியது.[11][12] இது 2023 செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருந்தது, இருப்பினும், அஜித்தின் உலகச் சுற்றுப்பயணம் காரணமாக, படப்பிடிப்பு தாமதமானது.[13] அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு, அப்போது நாடு உள்நாட்டு அமைதியின்மையில் இருந்ததால், குறிப்பாக நாகோர்னோ-கராபாக் மோதல் தொடர்பாக நெட்டிசன்களிடமிருந்து எதிர்மறையான பதில்களைப் பெற்றது.[14] படப்பிடிப்பு அட்டவணையில் அஜித் ரேசி கார் அதிரடி காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.[15] நவம்பர் இறுதியில், அஜித் ஒரு குறுகிய இடைவெளிக்காக சென்னைக்குத் திரும்பினார். திசம்பர் 4 ஆம் தேதிக்குள் படப்பிடிப்புக்குத் திரும்பினார்.[16][1] நீரவ் ஷாவின் மற்ற பணிகளின் காரணமாக, ஓம் பிரகாஷ் முழு அட்டவணையையும் படமாக்கினார்.[17] அட்டவணை 29 சனவரி 2024 இல் முடிவடைந்தது.[18]

இசை

பாடல்களுக்கும், பின்னணி இசையமைப்பிற்கும் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். மகிழ் திருமேனியுடன் தனது முதல் ஒத்துழைப்பில், வேதாளம் (2015) விவேகம் (2017) திரைப்படத்திற்குப் பிறகு அஜித்துடன் மூன்றாவது தடவையாக இணைந்துள்ளார்.[19]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Ajith's 'Vidaa Muyarchi' next intense shoot to start on December 7". 4 December 2023 இம் மூலத்தில் இருந்து 13 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231213192609/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ajiths-vidaa-muyarchi-next-intense-shoot-to-start-on-december-7/articleshow/105720210.cms. "Ajith's 'Vidaa Muyarchi' next intense shoot to start on December 7". The Times of India. 4 December 2023. Archived from the original on 13 December 2023. Retrieved 13 December 2023.
  2. "Ajith-Nayanthara-Vignesh Shivan, 'AK 62' reports stir up expectations" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 March 2022 இம் மூலத்தில் இருந்து 20 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230420142739/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ajith-nayanthara-vignesh-shivan-ak-62-reports-stir-up-expectations/articleshow/90225629.cms. 
  3. "#AK62: Ajith teams up with Vignesh Shivan and Anirudh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 March 2022 இம் மூலத்தில் இருந்து 4 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240204154405/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ak62-ajith-teams-up-with-vignesh-shivan-and-anirudh/articleshow/90273458.cms. 
  4. "'AK 62': Ajith's film with Vignesh Shivan launched officially". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 March 2022 இம் மூலத்தில் இருந்து 22 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230822185622/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ak-62-ajiths-film-with-vignesh-shivan-launched-officially/articleshow/90310376.cms. 
  5. "Magizh Thirumeni replaces Vignesh Shivan as a director for 'Ajith 62'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 January 2023 இம் மூலத்தில் இருந்து 2 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230202122404/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/magizh-thirumeni-replaces-vignesh-shivan-as-a-director-for-ajith-62/articleshow/97414101.cms. 
  6. "It's official: Ajith to team up with Magizh Thirumeni for 'Vidaamuyarchi'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 May 2023 இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514003844/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/its-official-ajith-to-team-up-with-magizh-thirumeni-for-vidaamuyarchi/articleshow/99892400.cms. 
  7. "Art director of Ajith Kumar's Vidaamuyarchi, Milan, passed away during shoot in Azerbaijan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 October 2023 இம் மூலத்தில் இருந்து 16 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231016030438/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vidaamuyarchi-art-director-milan-passes-away-during-shoot-in-azerbaijan/articleshow/104439362.cms. 
  8. Subramanian, Anupama (8 September 2023). "Trisha Cast Opposite Ajith". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 14 September 2023. பார்க்கப்பட்ட நாள் 4 February 2024.
  9. "Vidaa Muyarchi: Arjun Sarja, Ajith Kumar, and Aarav Indulge in Late-Night Dinner in Azerbaijan During Shoot of Magizh Thirumeni's Latest Project (View Pic)". LatestLY (in English). 14 December 2023. Archived from the original on 15 December 2023. பார்க்கப்பட்ட நாள் 4 February 2024.
  10. "'Vidaa Muyarchi': Regina Cassandra joins Ajith Kumar-Trisha starrer". இந்தியா டுடே. 11 October 2023. Archived from the original on 11 October 2023. பார்க்கப்பட்ட நாள் 4 February 2024.
  11. "Videos: Ajith Kumar jets off to Azerbaijan to commence 'Vidaa Muyarchi' shoot". இந்தியா டுடே. 3 October 2023. Archived from the original on 4 October 2023. பார்க்கப்பட்ட நாள் 3 October 2023.
  12. "Trisha Starts Shooting For Ajith's VidaaMuyarchi In Azerbaijan, Says 'Get A Job You Don't Need Vacation From'". Times Now. 4 October 2023. Archived from the original on 4 October 2023. பார்க்கப்பட்ட நாள் 4 October 2023.
  13. "Ajith's Vidaamuyarchi shooting to begin in September". 8 August 2023 இம் மூலத்தில் இருந்து 22 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230822190906/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ajiths-vidaamuyarchi-shooting-to-begin-in-september/articleshow/102533454.cms. 
  14. "Ajith's VidaaMuyarchi Invites Controversy! Netizens Are Slamming The Makers For This Reason!". Times Now. 4 October 2023. Archived from the original on 4 October 2023. பார்க்கப்பட்ட நாள் 4 October 2023.
  15. "Ajith completes filming a racy car action sequence for 'Vidaamuyarchi'". 10 November 2023 இம் மூலத்தில் இருந்து 10 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231110145650/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ajith-completes-filming-a-racy-car-action-sequence-for-vidaamuyarchi/articleshow/105119423.cms. 
  16. "Ajith Kumar returns to Chennai for a short break". 24 November 2023 இம் மூலத்தில் இருந்து 13 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231213192610/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ajith-kumar-returns-to-chennai-for-a-short-break/articleshow/105469820.cms. 
  17. "Om Prakash replaces Nirav Shah as the cinematographer of Ajith's 'Vidaamuyarchi'". 12 December 2023 இம் மூலத்தில் இருந்து 29 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240129134735/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/om-prakash-replaces-nirav-shah-as-the-cinematographer-of-ajiths-vidaamuyarchi/articleshow/105926999.cms. 
  18. "Done with the AZERBAIJAN 🇦🇿 schedule! The VIDAA MUYARCHI team has wrapped up & is gearing up for a new adventure at a new location. 📍🌏" (Tweet). 29 January 2024. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help) Missing or empty |user= (help); Missing or empty |number= (help)
  19. Rajaraman, Kaushik (21 February 2023). "Anirudh, Nirav Shah join Magizh Thirumeni for Ajith's AK62". DT Next. Archived from the original on 26 March 2023. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விடாமுயற்சி&oldid=37596" இருந்து மீள்விக்கப்பட்டது