நேர்கொண்ட பார்வை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நேர்கொண்ட பார்வை
சுவரிதழ்
இயக்கம்எச். வினோத்
தயாரிப்புபோனி கபூர்
கதைஎச். வினோத்
சூஜித் சர்கார்
ரிதேஷ் சா
அனிருதா ராய் செளத்ரி
மூலக்கதைஅனிருதா ராய் செளத்ரியின் பிங்க் (2016 திரைப்படம்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅஜித் குமார்
ஷ்ரத்தா ஸ்ரீநாத்
அபிராமி வெங்கடாசலம்
ஆண்ட்ரியா டாரியாங்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புகோகுல் சந்திரன்
கலையகம்சீ ஸ்டூடியோஸ் & பேவியூ பிராஜெக்ட்ஸ் எல்எல்பி
விநியோகம்எஸ் பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 8, 2019 (2019-08-08)
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நேர்கொண்ட பார்வை (Nerkonda Paarvai) (மொ.பெ. Direct gaze) 2019 ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் எச். வினோத் என்பரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியான இந்தி திரைப்படமான பிங்க் என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.[1] இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரங்கராஜ் பாண்டே மற்றும் ஆதிக் இரவிச்சந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை நீரவ் சாவும், படத்தொகுப்பை கோகுல் சந்திரனும் மேற்கொண்டுள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு பின்னணி இசை யுவன் சங்கர் ராஜாவால் செய்யப்பட்டு சீ மியூசிக் நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஆகத்து 8 ஆம் நாள் வெளியிடப்பட்டு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

நடிப்பு

  • பரத் சுப்ரமணியமாக அஜித் குமார்
  • கல்யாணி பரத்தாக வித்யா பாலன்(கெளரவத் தோற்றம்)
  • மீரா கிருஷ்ணனாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்
  • பாத்திமா பானுவாக அபிராமி வெங்கடாசலம்
  • ஆண்ட்ரியா டாரியாங்காக ஆண்ட்ரியா தாரியாங்
  • ஆதிக் ராமஜெயமாக அர்ஜூன் சிதம்பரம்
  • விஸ்வாவாக ஆதிக் ரவிச்சந்திரன்
  • வெங்கடேஷாக அஸ்வின் ராவ்
  • கவாஸ்கராக சுஜித் சங்கர்
  • சத்யமூர்த்தியாக ரங்கராஜ் பாண்டே
  • கிருஷ்ணனாக டெல்லி கணேஷ்
  • ஜூனியராக ஜூனியர் பாலையா
  • தீபக்கா உதய் மகேஷ்
  • ராமஜெயமாக ஜெயப்பிரகாஷ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நேர்கொண்ட_பார்வை&oldid=35002" இருந்து மீள்விக்கப்பட்டது