விக்ரம் கிருஷ்ணா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்ரம் கிருஷ்ணா ரெட்டி
பிறப்புவிக்ரம் கிருஷ்ணா
அக்டோபர் 11, 1975 (1975-10-11) (அகவை 49)
தமிழ்நாடு, சென்னை
மற்ற பெயர்கள்அஜய்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993 - 2011
வாழ்க்கைத்
துணை
சிரேயா ரெட்டி (2008- தற்போது வரை)

விக்ரம் கிருஷ்ணா ரெட்டி (பிறப்பு: அக்டோபர் 11, 1975) என்பவர் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தமிழ் திரைப்பட முன்னாள் நடிகர் ஆவார். பிரபல நடிகர் விஷாலின் அண்ணனன் ஆவார்.[1] ஜி. கே. பிலிம் கார்ப்பரேஷன் என்ற பதாகையின் கீழ் இவர் படங்களைத் தயாரித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

விக்ரம் கிருஷ்ணா சென்னையில் ஜி. கே. ரெட்டி மற்றும் ஜனகி தேவி ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருந்தார். இவரது குடும்பத்தினர் சென்னையில் குடியேறினர். இவரது தம்பி விஷால் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர். இவருக்கு ஐஸ்வர்யா என்ற தங்கையும் உள்ளார்.[சான்று தேவை]

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் நடிகை சிரேயா ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.[2]

திரைப்படவியல்

நடிகராக

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1989 ஜாடிக்கேத்த மூடி குழந்தை நட்சத்திரமாக
1996 மகாபிரபு சிறப்புத் தோற்றம்
1999 அண்ணன் தங்கச்சி பாஸ்கர்
பூப்பறிக்க வருகிறோம் அரவிந்த்
2001 லவ் மேரேஜ் ஸ்ரீகாந்த்

தயாரிப்பாளராக

ஆண்டு படம் இயக்குனர் நடிகர்கள் மொழி குறிப்புகள்
2001 லவ் மேரேஜ் கே. சுபாஷ் விக்ரம் கிருஷ்ணா, ரஞ்சனா தமிழ்
2005 சண்டக்கோழி லிங்குசாமி விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் தமிழ்
2006 திமிரு தருண் கோபி விஷால், ரீமா சென், சிரேயா ரெட்டி தமிழ்
2008 சத்யம் ஏ. ராஜசேகர் விஷால், நயன்தாரா, உபேந்திரா தமிழ்
சல்யூட் தெலுங்கு
2009 தோராணை ஐயப்பன் விஷால், சிரேயா சரன், பிரகாஷ் ராஜ் தமிழ்
பிஸ்தா தெலுங்கு
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை திரு விஷால், சாரா-ஜேன் டயஸ், நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா தமிழ்
2011 வெடி பிரபுதேவா விஷால், சமீரா ரெட்டி தமிழ்

விநியோகம்

ஆண்டு படம் நடிகர்கள் மொழி குறிப்புகள்
2011 வாடு வீடு ஆர்யா, விஷால் தெலுங்கு 17, ஜூன் 2011 அன்று வெளியிடப்பட்டது

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விக்ரம்_கிருஷ்ணா&oldid=22135" இருந்து மீள்விக்கப்பட்டது