வலையப்பட்டி வலம்புரிநாதசுவாமி கோயில்
அருள்மிகு வலம்புரிநாதசுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | புதுக்கோட்டை |
அமைவிடம்: | வலம்புரிநாதசுவாமி தெரு, வலையப்பட்டி, பொன்னமராவதி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | திருமயம் |
மக்களவைத் தொகுதி: | சிவகங்கை |
கோயில் தகவல் | |
மூலவர்: | வலம்புரிநாத சுவாமி |
தாயார்: | வடுவகிர்விழியாள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | தைப்பூசம், சூரசம்காரம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | 1892 |
மலையாண்டி சுவாமி, வடுவகிர்விழியாள் உடனுறை வலம்புரிநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், வலையபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு
இங்கு முதலில் விநாயகருக்கு மட்டுமே சிறு கோயில் இருந்தது. பின்னர் நகரத்தாரின் முயற்சியால் குன்றின் மீது கற்கள் ஏற்றப்பட்டு கோயில் கட்டபட்டது. பிடாரிப்பட்டி கிராமத்தில் முங்கிற்புதரில் இருந்த சிவலிங்கத்தை மீட்டு வலம்புரிநாதர் என்ற பெயரில் இக்கோயிலில் பிரதிட்டை செய்தனர். பின்னர் புதியதாக அம்மன் சிலையை செதுக்கி வடுவகிர்விழியாள் என்ற பெயரில் அம்மனைப் பிரதிட்டைச் செய்தனர். இப்பணிகள் நிறைவுற்றப் பிறகு நந்தன ஆண்டு தை 19 ஆம் நாள் (1892) கோயிலின் முதல் குடமுழுக்கு செய்யப்பட்டது.[2]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் வலம்புரிநாதசுவாமி, சிவவடிவிளியாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் சூரசம்காரம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
- ↑ "வலையபட்டி மலையாண்டி சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்". Hindu Tamil Thisai. 2024-09-05. பார்க்கப்பட்ட நாள் 2024-10-05.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.