மலையாமருங்கர் கோயில், பெருங்களூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மலையாமருங்கர் கோயில்
மலையாமருங்கர் கோயில் is located in தமிழ் நாடு
மலையாமருங்கர் கோயில்
மலையாமருங்கர் கோயில்
ஆள்கூறுகள்:10°29′32″N 78°55′51″E / 10.4923°N 78.9309°E / 10.4923; 78.9309Coordinates: 10°29′32″N 78°55′51″E / 10.4923°N 78.9309°E / 10.4923; 78.9309
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:பெருங்களூர்
சட்டமன்றத் தொகுதி:புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதி:திருச்சிராப்பள்ளி
ஏற்றம்:103.68 m (340 அடி)
கோயில் தகவல்
மூலவர்:மலையாமருங்கர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

மலையாமருங்கர் கோயில் என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை வட்டத்தின் பெருங்களூரில் உள்ள ஓர் ஐயனார் கோயிலாகும்.

அமைவிடம்

புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 18 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் மலையாமருங்கர் அய்யனார், இறைவி பூரணி புஷ்கலை.[1]

சிறப்பு

பெருங்ளூரில் தன்னை வழிபடுகின்ற பக்தருக்கு கண் பார்வை வழங்கியதாகவும் அவர்களின் பரம்பரையினரே இக்கோயிலில் பணியாற்றி வருவதாகவும் கூறுகின்றனர். நாடி வருகின்ற பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மலையாமருங்கருக்கு, தம் விருப்பங்கள் நிறைவேற யானை வாங்கி வைப்பதாக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.[1]

திறந்திருக்கும் நேரம்

ஒரு கால பூசை இங்கு நடத்தப்பெறுகிறது.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.00 வரையிலும் திறந்திருக்கும். சித்திரை மாதத்தில் சித்திரைத்திருவிழா 10 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003