ராதிகா குமாரசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராதிகா குமாரசாமி
மைசூரு தசராவில் தனது பைர தேவி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இராதிகா குமாரசாமி, 2019
இராதிகா குமாரசாமி (2019)
பிறப்பு12 நவம்பர் 1986 (1986-11-12) (அகவை 37)
மங்களூர், கருநாடகம், இந்தியா
பணிநடிகை, திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்1

இராதிகா குமாரசாமி (Radhika Kumaraswamy) (பிறப்பு 1 நவம்பர் 1986[2][3] ), இராதிகா எனவும் தமிழ் படங்களில் குட்டி ராதிகா எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2000களின் முற்பகுதியில் கன்னடத் திரைப்படங்களில் தோன்றினார்.[4]

தொழில்

இராதிகா தனது ஒன்பதாம் வகுப்பை முடித்தபோது, நீல மேக சியாமா (2002) என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவரது முதல் வெளியீடு விஜய் ராகவேந்திரா இணையாக நினகாகி என்ற படமாக இருந்தது. அதைத் தொடர்ந்து சிவ ராஜ்குமார் நடித்த தவரிகே பா தங்கி வெளியானது. இரண்டு படங்களும் மிகவும் வெற்றிகரமான முயற்சிகளாக இருந்தது.[2] 2003 ஆம் ஆண்டில், இவர் ஹேமந்த் ஹெக்டேவின் முதல் அறிமுக இயக்கத்தில் ஓ லா லா; எஸ். பி. பி. சரணுடன் ஹுடுகிகாகி உட்பட ஐந்து கன்னடத் திரைப்படங்களில் தோன்றினார். யோகராஜ் பட்டின் மணி என்ற முதல் திரைப்படத்தில் இவர் ஒரு பாலியல் தொழிலாளியின் மகளாக நடித்தார்.[2] மனே மகாலு , தாயி இல்லடா தப்பாலி இவை அனைத்தும் வணிகத் தோல்விகளாகும்.[5] படங்களின் மோசமான பாக்ஸ் ஆபிஸ் வருமானம் இருந்தபோதிலும், தாயி இல்லடா தப்பாலியில் கௌரியாக இராதிகாவின் நடிப்பு இவருக்கு சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.

அடுத்த ஆண்டு, இவர் மீண்டும் ஐந்து கன்னடப் படங்களிலும், ஒரு தமிழ் படமான "உள்ள கடத்தல்" படத்திலும் காணப்பட்டார். அதுவே இவரது கடைசி தமிழ் வெளியீடாக உள்ளது. ஹடவாடியில் இவரது நடிப்பைப் பற்றி, Rediff.com இன் விமர்சகர் ஆர்ஜி விஜயசாரதி எழுதினார்: "இது அடிப்படையில் ஒரு ரவிச்சந்திரன் படம் என்பை வெளிபடுத்துகிறார். தன்னுடைய உணர்ச்சிகள் சரியானவை, இவர் திரையில் நன்றாகக் காட்டப்படுகிறார் ".[6] நீண்ட காலமாக் தயாரிபில் இருந்து தாமதமாக வெளியான பக்திப் படமான நவசக்தி வைபவா (2008) படத்தில், இவர் எட்டு முன்னணி நடிகைகளுடன் ஒரு தெய்வமாக நடித்திருந்தார்.

இவரது கன்னடப் படங்களின் அடுத்தடுத்த தோல்விகளால், இராதிகா தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கினார். அடுத்தடுத்து ஐந்து தமிழ் படங்களில் நடித்தார்.[7] எஸ். பி. ஜனநாதனின் விருது பெற்ற இயற்கை (2003) இவரது முதல் தமிழ் படமாகும். தி இந்து தனது விமர்சனத்தில், குட்டி ராதிகா "மனக்கிளர்ச்சி, முதிர்ச்சியற்ற மற்றும் பிடிவாதமான நான்சி பாத்திரத்திற்கு சரியாகத் தோன்றுகிறார்" என்று குறிப்பிட்டது. 2005 ஆம் ஆண்டில் இவரது நான்கு வெங்களில் இவர் நடித்திருந்தர்.[8] 2005ஆம் ஆண்டின் இறுதி வெளியீடாக இவர் தவரிகே பா தங்கி அணியுடன் பணியாற்றினார். சிவராஜ்குமார் இவரது மூத்த சகோதரராகவும் இவர் அவரது தங்கையாகவும் நடித்தனர்.[9]

சொந்த வாழ்க்கை

இராதிகா 26 நவம்பர் 2000 அன்று கட்டீல் துர்கா பரமேசுவரி கோவிலில் இரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்பட்டது.[10][11][11] இரத்தன் குமார் ஆகத்து 2002இல் மாரடைப்பால் இறந்தார்.

நவம்பர் 2010 இல், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எச். டி. குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாக ராதிகா தெரிவித்தார்.[12] இராதிகாவின் கூற்றுப்படி, இவர்கள் 2006இல் திருமணம் செய்து கொண்டனர்.[13] இவர்களுக்கு ஷாமிகா என்ற மகள் உள்ளார்.[14]

தேவகவுடா குடும்பம்

மேற்கோள்கள்

  1. "Actress Radhika's 'husband' dies of heart attack". 27 August 2002. https://m.timesofindia.com/city/bengaluru/Actress-Radhikas-husband-dies-of-heart-attack/articleshow/20396299.cms. 
  2. 2.0 2.1 2.2 "Big time for li'l girl" இம் மூலத்தில் இருந்து 2006-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060915193310/http://www.hindu.com/thehindu/fr/2005/08/05/stories/2005080504150100.htm. 
  3. "Kannada Movie/Cinema News - IT IS OFFICIAL ON PRINT ? RADHIKA! - Chitratara.com". http://www.chitratara.com/show-content.php?id=3296&ptype=News&title=IT%20IS%20OFFICIAL%20ON%20PRINT%20%96%20RADHIKA%20KUMARASWAMY!. 
  4. "Radhika breaks her silence". Sify இம் மூலத்தில் இருந்து 28 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141128150924/http://www.sify.com/movies/radhika-breaks-her-silence-news-kannada-klxlkCgjacf.html?ref=false. 
  5. "A year of highs and lows - Deccan Herald" இம் மூலத்தில் இருந்து 3 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160603235156/http://archive.deccanherald.com/Deccanherald/dec28/enter2.asp. 
  6. "Hatavadi: For Ravichandran fans and more". http://www.rediff.com/movies/2006/mar/27hat.htm. 
  7. "Welcome to Sify.com" இம் மூலத்தில் இருந்து 17 November 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091117222205/http://sify.com/movies/kannada/interview.php?id=13623912&cid=2404. 
  8. "IndiaGlitz – Radhika game for two-heroine films – Kannada Movie News" இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924122444/http://www.indiaglitz.com/channels/kannada/article/17301.html. 
  9. "Brother-sister duo is back - Deccan Herald - Internet Edition". http://archive.deccanherald.com/Deccanherald/may12005/enter1218152005429.asp. 
  10. "Husband, father fight over actress". http://www.indianexpress.com/oldStory/1209/. 
  11. 11.0 11.1 "Husband's story flops, 'abducted'". http://www.indianexpress.com/oldStory/1437/. 
  12. "Radhika breaks her silence" இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141128150924/http://www.sify.com/movies/radhika-breaks-her-silence-news-kannada-klxlkCgjacf.html?ref=false. .
  13. "Radhika Kumarswamy goes open on her Connections" இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304061002/http://www.supergoodmovies.com/34999/sandalwood/radhika-kumarswamy-goes-open-on-her-connections-news-details. 
  14. "Radhika Kumaraswamy: Rads to filmi riches". Deccanchronicle.com. http://www.deccanchronicle.com/entertainment/sandalwood/260417/radhika-kumaraswamy-rads-to-filmi-riches.html. 
"https://tamilar.wiki/index.php?title=ராதிகா_குமாரசாமி&oldid=23301" இருந்து மீள்விக்கப்பட்டது