ராட்சசி (2019 திரைப்படம்)
ராட்சசி | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | சையத் கௌதம்ராஜ் |
தயாரிப்பு | எஸ். ஆர். பிரகாஷ்பாபு எஸ். ஆர். பிரபு |
கதை | சையத் கௌதம்ராஜ் |
இசை | ஷான் ரோல்டன் |
நடிப்பு | ஜோதிகா ஹரீஷ் பேரடி |
ஒளிப்பதிவு | கோகுல் பெனாய் |
படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
கலையகம் | டிரீம் வாரியர் பிக்சர்ஸ் |
விநியோகம் | டிரீம் வாரியர் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 5, 2019(இந்தியா) |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராட்சசி (Raatchasi) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான[1] இந்தியத் தமிழ் மொழி குழந்தைகள் சமூக நாடகத் திரைப்படமாகும். சையத் கெளதம்ராஜ் எழுதி இயக்கிய[2] இந்தப் படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் எஸ். ஆர். பிரகாஷ்பாபு, எஸ். ஆர். பிரபு தயாரித்திருந்தார்.[3] இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4] ஹரீஷ் பேரடி, பூர்ணிமா பாக்கியராஜ், சத்யன், நாகினீடு, அருள்தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.[5] பிலோமின் ராஜ் படத் தொகுப்பையும், கோகுல் பெனாய் ஒளிப்பதிவையும் மேற்கொண்டிருந்தனர். 5 சூலை 2019 அன்று படம் வெளியானதும், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[6]
இந்த படம் 2020இல் கோல்ட்மினாஸ் டெலிஃபிலிம்ஸால் இந்தியில் மேடம் கீதா ராணி என மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இது யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 9 மாதங்களுக்குள் 180 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.[7]
ஒலிப்பதிவு
சீன் ரோல்டன் இசையமைத்த படத்தின் 5 பாடல்களைக் கொண்ட இசை, 20 சீன் 2019 அன்று வெளியிடப்பட்டது. பாடல்களை யுகபாரதி, தனிக்கொடி, சீன் ரோல்டன், சை. கௌதம்ராஜ் ஆகியோர் எழுதியுள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ "Jyotika's 'Raatchasi' to release on July 5". Sify (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-06-24.
- ↑ "Raatchasi trailer is a woman on a mission". www.thenewsminute.com. 31 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
- ↑ "First look of Jyotika's 'Raatchasi' – Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
- ↑ https://silverscreen.in/news/jyothika-to-play-school-teacher-in-her-upcoming-film-ratchasi/
- ↑ "Jyothika's Raatchasi movie official trailer video". Behindwoods. 2019-05-31. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
- ↑ "Raatchasi movie review: Here is what netizens say about Jyothika-starrer". 5 July 2019.
- ↑ Madam Geeta Rani (Raatchasi) 2020 New Released Hindi Dubbed Full Movie | Jyothika, Hareesh Peradi (in English), பார்க்கப்பட்ட நாள் 2021-10-07