யாவரும் நலம்
யாவரும் நலம் | |
---|---|
இயக்கம் | விக்ரம் குமார் |
தயாரிப்பு | சுரேஷ் பாலாஜி ஜார்ஜ் பியஸ் ராஜேஷ் சுவானி |
கதை | விக்ரம் குமார் நீலு ஐயப்பன் அபினவ் கஷ்யப் (இந்தி உரையாடல்கள்) |
இசை | சங்கர் எசேன் லாய் துப்பி பரிக் |
நடிப்பு | மாதவன் நீத்து சந்திரா சச்சின் ஹெடக்கர் தீபக் டோப்ரியால் முரளி சர்மா ரிட்டிமேன் சட்டர்ஜி சம்பத் ராஜ் சரண்யா |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | ஸ்ரீகர் பிரசாத் |
விநியோகம் | பிக் பிக்சர்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 6, 2009 |
ஓட்டம் | 137 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி |
ஆக்கச்செலவு | ₹6 கோடி[1] |
மொத்த வருவாய் | ₹16 கோடி (தமிழ்) ₹8.1 crore (Hindi)[1][2] |
யாவரும் நலம் (Yaavarum nalam) ([All are fine] Error: {{Lang-xx}}: text has italic markup (help)) 2009 இல் வெளிவந்த இந்திய தமிழ், இந்தி திரைப்படம் ஆகும். விக்ரம் குமார் இயக்கத்தில் விக்ரம் குமார், நீலு ஐயப்பன், அபினவ் கஷ்யப் போன்றவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளனர். இதனை பிக் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் மாதவன், நீத்து சந்திரா, சச்சின் ஹெடக்கர், தீபக் டோப்ரியால், முரளி சர்மா, ரிட்டிமேன் சட்டர்ஜி, சம்பத் ராஜ் மற்றும் சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2009 மார்ச் 6 அன்று வெளியானது.
கதை
மனோகர், (மாதவன்), அவரது குடும்பத்துடன் ஒரு புதிய குடியிருப்பின் 13 வது மாடியில் 13 பி என்ற வீட்டிற்கு குடியேறுகிறார்., அவருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய கனவு ஒன்று உண்டு. அவர்கள் அந்த வீட்டில் விசித்திரமான சம்பவங்களை சந்திக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள பெண்கள் ஒரு புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "யாவரும் நலம்" என்ற இந்தி நாடகத்தை பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மனோகரின் குடும்பத்தைப் போலவே அங்கேயும் ஒரு குடும்பம் இருக்கிறது, அவர்களும் ஒரு புதிய வீட்டிற்கு செல்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஏற்படும் நிகழ்வுகள் அவரது குடும்பத்திற்குள் பிரதிபலிப்பதை மனோகர் கவனிக்கிறார் இதன் பின்னணி யார் என்பதை தெரிந்துகொள்ள அவர் விரும்புகிறார். பின்னர் ஒரு மழை நாளில் அவருக்கு ஒரு டயரி கிடைக்கிறது , அதி மனோகருக்கான விடை கிடைக்கிறது. பின்னர் நடக்கும் பல திகிலூட்டும் சம்பவங்களைக் கொண்டு படம் நகர்கிறது.
நடிகர்கள்
மாதவன் - மனோகர்
நீத்து சந்திரா - பிரியா மனோகரின் மனைவி
ரவி பாபு - காவல் ஆய்வாளர் ரவி
சரண்யா - மனோகரின் தாயார்
சம்பத் ராஜ் - வழக்குரைஞர் ராமச்சந்திரன்
குஷ்பூ
ரோகினி
மற்றும் பலர்
தயாரிப்பு
இப்படத்தின் இயக்குனர் விக்ரம் குமார், "சைலன்ட் ஸ்க்ரீம்" என்ற படத்திற்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய பி. சி. ஸ்ரீராம் , படத்தொகுப்பாளார் ஸ்ரீகர் பிரசாத், ஒலி அமைப்பாளர் ஏ. எஸ். லட்சுமி நாராயணன் ,கலை இயக்குனர் சமோர் சந்தா ஆகியோரும் கூட தேசிய விருதினைப் பெற்றவர்கள்.[3] ஈஷா தியோல் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் இதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நீது சந்திரா தமிழில் அறிமுகமானார். இவர் பல இந்தியில் பல வெற்றிப் படங்களை அளித்துள்ளார். நடிகர் மாதவன் மற்றும் ஒளிப்பதிவு இயக்குனர் பி. சி. ஸ்ரீராம் ஆகிய இருவரும் ஏற்கனவே " அலை பாயுதே" படத்தில் இணைந்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Top 10 movies of 2009". Hindustan Times. 2009-12-24 இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225172920/https://www.hindustantimes.com/archive-news/. பார்த்த நாள்: 2012-03-16.
- ↑ "13B netted 8.3 crore" இம் மூலத்தில் இருந்து 2012-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120715040611/boxofficeindia.com/showProd.php?itemCat=290&catName=MjAwOQ==.
- ↑ "Chennai365.com: "Yavarum Nalam Movie Photo Gallery"" இம் மூலத்தில் இருந்து 2008-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080118210638/http://www.chennai365.com/movies/yavarum-nalam-movie-photo-gallery/.