விக்ரம் குமார்
விக்ரம் கே. குமார் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | விக்ரம் குமார் |
பிறப்பு | விக்ரம் குமார் 1975 (வயது 43) திருச்சூர், கேரளம், இந்தியா[1] |
தேசியம் | இந்தியா |
பணி | இந்தியா திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது |
வாழ்க்கைத் துணை | ஸ்ரீனிநி வெங்கடேஷ் |
விக்ரம் கே. குமார் என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தெலுங்கு,தமிழ், இந்தி திரைப்படத்துறைகளில் படங்களை இயக்கியுள்ளார்.[2]
சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். 1997 இல் இயக்குனர் பிரியதர்சன் என்பவரிடம் துணை இயக்குனராக இணைந்தார். சந்திரலேகா என்ற திரைப்படத்திலும், டோலி சஜா கி ரக்னா. ஹேரா ஃபெரி திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றினார்.
1998 இல் சைலண்ட் ஸ்க்ரீம் என்ற திரைப்படத்தினை முதன்முதலாக இயக்கினார். இத்திரைப்படம் சிறந்த சுயமுன்னேற்றத்திற்கான திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.[3]
2001 இல் பெரியதிரை திரைப்படமாக தெலுங்கில் இஸ்டம் திரைப்படத்தினை இயக்கினார். இப்படத்தில் சிரேயா சரன் அறிமுகமானார்.யாவரும் நலம் (13பி) என்ற திகில் திரைப்படத்தினை நடிகர் மாதவனை நாயகனாக வைத்து இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தந்தார்.
யாவரும் நலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிர்ஸ்டசாலி என்ற பெயரில் அதன் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டார். அப்படத்தின் நாயகனாக மாதவன் தேர்வு செய்யப்பட்ட போதும், கைவிடப்பட்டது.[4]
திரைப்படங்கள்
Denotes films that have not yet been released |
ஆண்டு | படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
1998 | சயிலனட் ஸ்கீம் | ஆங்கிலம் | |
2001 | இஸ்டம் | தெலுங்கு | |
2003 | அலை | தமிழ் | |
2009 | யாவரும் நலம் | தமிழ் | |
யாவரும் நலம் | இந்தி | ||
2012 | இஸ்க் | Telugu | |
2014 | மனம் | தெலுங்கு | |
2016 | 24 | தமிழ் | |
2017 | ஹலோ | தெலுங்கு |
விருதுகள்
- சிறந்த தன்னம்பிக்கை திரைப்படத்திற்கான தேசிய விருது (இயக்குனர்) சயிலன்ட் ஸ்கீம் (1998)
ஆதாரங்கள்
- ↑ Sunkari, Chandrasekhar. "పెళ్లికి ఆహ్వానిస్తే... సినిమా చెయ్యమన్నారు!". www.eenadu.net. Hyderabad: Eenadu. Archived from the original on 18 January 2018. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
- ↑ Director Vikram K Kumar - Interview - Behindwoods.com - Tamil Movie Actor Interviews - Yaavarum Nalam 13B Alai Silent Scream Ishtam
- ↑ "46th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.