யமுனா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
யமுனா
இயக்கம்இ. வி. கணேஷ் பாபு
தயாரிப்புஎஸ். ஜெய்கார்த்திக்
விருதை எம். பாண்டி
இசைஇலக்கியன்
நடிப்பு
ஒளிப்பதிவுபொ. சிதம்பரம்
படத்தொகுப்புபி. லெனின்
கலையகம்சிறீ அரிபாலாஜி மூவி புரொடக்சன்ஸ்
விநியோகம்எஸ். எஸ். ஸ்டுடியோஸ்
வெளியீடுசூன் 7, 2013 (2013-06-07)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

யமுனா (Yamuna) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இ. வி. கணேஷ் பாபு இயக்கிய இப்படத்தில் சத்யா, ஸ்ரீரம்யா, இ. வி. கணேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[1][2] எஸ். ஜெய்கார்த்திக், விருதை எம். பாண்டி ஆகியோர் தயாரித்த இப்படத்திற்கு இலக்கியன் இசை அமைத்தனர். பாடல்களை வைரமுத்து எழுதினார்.[3] இப்படம் 7, சூன், 2013 அன்று வெளியானது.

கதை

கல்லூரியில் படித்து வரும் யமுனாவை (சிறீரம்யா) அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் பாஸ்கர் (சத்யா) காதலிக்கிறான். பாஸ்கரின் காதலை ஏற்க மறுக்கிறாள் யமுனா. இதனால் பாஸ்கர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கிறான். பலத்த காயமடைந்த பாஸ்கர் காப்பாற்றபடுகிறான். பாஸ்கரின் காதலை உணர்ந்த யமுனா அவன் காதலை ஏற்கிறாள்.

இதன்பிறகு யமுனா திடீரென காணாமல் போகிறாள். சில நாட்களுக்கு பிறகு கல்லூரிக்கு திரும்பும் அவள், பாஸ்கரிடம் காதலை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கிறாள். இதற்கான காரணம் என்ன என்பதே கதையின் பின்பகுதியாகும்.

நடிகர்கள்

இசை

படத்திற்கான இசையை இலக்கியன் அமைத்துள்ளார். படல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Actor Ganesh Babu turns director with Yamuna". in.com. 2012-09-12. பார்க்கப்பட்ட நாள் 2012-09-12.
  2. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/yamuna/movie-review/20600458.cms
  3. யமுனா திரைப்பட விமர்சனம், மாலைமலர், பார்த்த நாள் 2021 பெப்ரவரி 8
"https://tamilar.wiki/index.php?title=யமுனா_(திரைப்படம்)&oldid=36885" இருந்து மீள்விக்கப்பட்டது