மை லார்ட்
| மை லார்ட் | |
|---|---|
திரைப்பட பதாகை | |
| இயக்கம் | ராஜு முருகன் |
| தயாரிப்பு | ஜெயந்தி அம்பேத்குமார் |
| கதை | ராஜு முருகன் |
| இசை | ஷான் ரோல்டன் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
| படத்தொகுப்பு | சத்யராஜ் நடராஜன் |
| கலையகம் | ஒலிம்பியா பிலிம்ஸ் |
| விநியோகம் | 2டி என்டேர்டைன்மென்ட் |
| வெளியீடு | 13 பெப்பிரவரி 2026 |
| ஓட்டம் | 149 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மை லார்ட் என்பது 2026இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராஜு முருகன் இயக்கினார். சசிகுமார், சைத்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 13, 2026 அன்று வெளியானது.
கதைச் சுருக்கும்
வள்ளலார் வழியில் வாழும் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துச்சிற்பி (சசிகுமார்) கதையின் மையப்பாத்திரம். ஒன்றிய அமைச்சர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட, அவரது உயிரைக் காப்பாற்ற பொருத்தமான சிறுநீரகம் தேடப்படுகிறது. அமைச்சரின் அரிதான இரத்த வகைக்கு பொருந்துமாறு தேடியதில் முத்துச்சிற்பியின் சிறுநீரகம் பொருத்தமானதாக கண்டறியப்படுகிறது.
முத்துச்சிற்பியை கோவில்பட்டியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து அவரது சிறுநீரகத்தை அமைச்சருக்கு பொருத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ஆரம்பத்தில் இதற்கு முத்துச்சிற்பி ஒப்புக்கொண்டாலும், பின்னர் ஒரு கட்டத்தில் மறுக்கிறார். இந்நிலையில், அதிகாரத்தின் திமிர் எளிய மக்களை எவ்வாறு சுற்றிவளைக்கிறது என்பதையும், அரசாங்க துறைகளில் நடைபெறும் அநியாயங்களையும் படம் வெளிப்படுத்துகிறது.
உறுப்புதானம் என்ற பெயரில் நடைபெறும் சிறுநீரக திருட்டு, இறப்புச் சான்றிதழ் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அநீதிகளை படம் எடுத்துரைக்கிறது. கடைசிக்கோடி மனிதனின் கையில் அதிகாரம் கிடைத்தால் அவர் அதை எவ்வாறு பயன்படுத்துவார் என்பதே படத்தின் மையக்கருத்து.
நடிகர்கள்
- சசிகுமார் - முத்துசிற்பி
- சைத்ரா ஜே. ஆச்சார் - சுசீலா, முத்துசிற்பியின் மனைவி
- ஆஷா சரத் - ஒன்றிய அமைச்சர் சுஜாதா மோகன்
- குரு சோமசுந்தரம் - கதிர் வேலன்
- ஜெயப்பிரகாசு - நீதி யரசர் இராமானுஜம்
- கோபி நைனார்
- வசு மித்ரா
- அருள் எழிலன்
விமர்சனங்கள்
இந்து தமிழ் திசை நாளிதழுக்காக டெக்ஸ்டர் எழுதிய விமர்சனத்தில், "ஒரு முக்கிய சமூக பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு, அதில் வர்க்க அரசியலையும், உறுப்பு தானம் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் அரசியலையும் தோலுரித்துக் காட்டும் இப்படத்தை சில குறைகளை தாண்டியும் வரவேற்கலாம்" என்று எழுதினார்.[2] தினமலர் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "ஓபனிங், கிளைமாக்ஸ் நல்லா இருக்கு, இடையில் கொஞ்சம் சொதப்பிட்டீங்க மை லார்ட்" என்று எழுதி படிமம்:Star full.svgபடிமம்:Star full.svgபடிமம்:Star full.svgபடிமம்:Star empty.svgபடிமம்:Star empty.svg மதிப்பீடுகள் வழங்கினர்.[3] வீரகேசரி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "'சக மனிதர்கள் மீது அன்பும் , நம்பிக்கையும் செலுத்தினால் நீ தான் கடவுள்' என்பதை சொல்ல விரும்பிய இயக்குநருக்கு நடிகர்- நடிகைகள்- தொழில்நுட்ப கலைஞர்கள் - என அனைவரும் தங்களுடைய அர்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி இருக்கின்றனர்" என்று எழுதி படிமம்:Star full.svgபடிமம்:Star full.svgபடிமம்:Star full.svgபடிமம்:Star empty.svgபடிமம்:Star empty.svg மதிப்பீடுகள் வழங்கினர்.[4]
மேற்கோள்கள்
- ↑ "My Lord (2026)". Irish Film Classification Office. 6 February 2026. Archived from the original on 7 February 2026. Retrieved 6 February 2026.
- ↑ டெக்ஸ்டர் (2026-02-13). "'மை லார்ட்' விமர்சனம்: ராஜுமுருகன் பேசிய வர்க்க அரசியல் எப்படி?". Hindu Tamil Thisai. Retrieved 2026-02-14.
- ↑ "மை லார்ட் - விமர்சனம் {3/5} : மை லார்ட் - ஓபனிங், கிளைமாக்ஸ் நல்லா இருக்கு, இடையில் கொஞ்சம் சொதப்பிட்டீங்க மை லார்ட் - My Lord". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2026-02-14.
- ↑ "மை லார்ட் - திரைப்பட விமர்சனம்". Virakesari.lk (in ஆங்கிலம்). Retrieved 2026-02-14.