மு. பெருமாள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மு. பெருமாள் (பிறப்பு அக்டோபர் 5, 1942) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். மு. அன்புச்செல்வன் எனும் புனைப்பெயரால் நன்கு அறியப்பட்டவர். இவர் எழுத்தராகப் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வின் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். தற்போது மக்கள் ஓசை இதழில் சிறுகதைப் பகுதிக்குப் பொறுப்பாக உள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, நாவல், தொடர்கதை, புதுக்கவிதை போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்

  • சிறுகதைப் போட்டிகளில் பலமுறை பரிசுகளும் பதக்கங்களும் பெற்றுள்ளார்.
  • மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் போட்டிகளில் பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளார்.
  • டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1983)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மு._பெருமாள்&oldid=6388" இருந்து மீள்விக்கப்பட்டது