முல்லைவனம்
முல்லைவனம் | |
---|---|
இயக்கம் | வி. கிருஷ்ணன் |
தயாரிப்பு | வி. கிருஷ்ணன் |
கதை | கே. ராமச்சந்திரன் |
திரைக்கதை | ஏ. கே. வேலன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | |
படத்தொகுப்பு | டி. விஜயரங்கம் |
கலையகம் | அரவிந்த் பிக்சர்ஸ், கோவை |
வெளியீடு | மார்ச்சு 11, 1955(India)[1] |
ஓட்டம் | 14351 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முல்லைவனம் 1955 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஸ்ரீராம் (மதுரை ஸ்ரீராம் நாயுடு), குமாரி ருக்மிணி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]
திரைக்கதை
பவானி என்ற ஒரு பெண் அஞ்சல் பட்டுவாடா செய்யும் பழைய வண்டி ஒன்றில் பயணம் செய்து கொண்டிருக்கிறாள். கூட வரும் இன்னொரு பயணி அவளுக்கு ஒரு கதை சொல்கிறார். ஒரு இளம் பெண் இருந்தாள். அவள் ஒருவரை விரும்பினாள். ஆனால் கொடுமைக்காரியான அவளது அத்தை அவளைத் தன் தம்பிக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்ய முற்படுகிறாள். திருமண வைபவம் நடக்க இருந்த சமயத்தில் தாலி காணாமற் போய் விடுகிறது. அந்த இளம் பெண் அவள் விரும்பியவனைத் திருமணம் செய்வதற்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதே மீதிக் கதையாகும்.[2]
நடிகர்கள்
- ஸ்ரீராம்[2]
- குமாரி ருக்மிணி[2]
- பி. எஸ். வீரப்பா[2]
- பி. எஸ். ஞானம்[2]
- ஏ. கருணாநிதி[2]
- எஸ். ஏ. நடராஜன்[2]
தயாரிப்பு விபரம்
கோவை அரவிந்த் பிக்சர்ஸ் உரிமையாளர் வி. கிருஷ்ணன் தயாரித்த பல படங்களில் இதுவும் ஒன்று. ராஜேஸ்வரி, லலிதா ராவ் ஆகியோரின் நடனம் இத்திரைப்படத்தில் இடம்பெற்றது. நட்டுவாங்கம் செய்தவர் பிரபல நட்டுவனார் வழுவூர் பி. இராமையா பிள்ளை[2]
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை இயற்றியோர்: கு. சா. கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை ராமையாதாஸ், கே. எம். ஷெரிப், கொ. கு. ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: எம். கே. விஜயா, குருவாயூர் பொன்னம்மா, ஏ. பி. கோமளா, ராதா ஜெயலட்சுமி, ஜெயசக்திவேல், கஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன் ஆகியோர்.[2]
பின்வரும் பாடல்கள் பட்டியல் ஸ்பைசிஆனியன். காம் தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது [3]
பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு (mm:ss) |
---|---|---|---|
எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே | டி. எம். சௌந்தரராஜன் ராதா ஜெயலட்சுமி |
03:25 | |
சரியென்று நீ ஒரு | டி. எம். சௌந்தரராஜன் ஏ. பி. கோமளா |
03:25 | |
காயா பழமா சொல்லுங்க | ஏ. பி. கோமளா | ||
குறவன் குறத்தி பாட்டு | ஏ. பி. கோமளா குருவாயூர் பொன்னம்மா |
||
நினைத்தாலே | ராதா ஜெயலட்சுமி | ||
புத்தம் புது | ராதா ஜெயலட்சுமி |
சான்றாதாரங்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம் இம் மூலத்தில் இருந்து 2016-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161119181902/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails30.asp. பார்த்த நாள்: 2016-11-19.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 "Mullaivanam (1965)". தி இந்து. 21 மார்ச்சு 2015 இம் மூலத்தில் இருந்து 19 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161119023104/http://www.thehindu.com/features/cinema/mullaivanam-1965/article7018672.ece. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2016.
- ↑ "முல்லைவனம் தமிழ் திரைப்படம்". spicyonion.com. http://spicyonion.com/tamil/movie/mullai-vanam/#allartists. பார்த்த நாள்: 2016-11-19.