முருகதாசா
முருகதாசா (பிறப்பு: 1900)[1] என்று அழைக்கப்பட்ட ஏ. முத்துசுவாமி ஐயர் 1930-40களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும் ஆவார்.[2] சுந்தரமூர்த்தி நாயனார் (1937), பட்டினத்தார் (1936), நந்தனார் (1942) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தொடக்கத்தில் இவர் சித்ரவாணி என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். இப்பத்திரிகையின் உதவி ஆசிரியராக பி. எஸ். இராமையா இருந்தார்.[2] சௌண்ட் அண்ட் ஷடோ (Sound and Shadow) என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். பின்னர் திரைப்படத் துறைக்கு வந்தார்.[3] ஏ. கே. சேகர், கே. ராம்நாத் போன்ற இயக்குநர்கள் இவருக்குக் கீழ் பணியாற்றினார்கள்.[2] 1956 இல் வெளிவந்த தெனாலி ராமகிருஷ்ணா என்ற தெலுங்குத் திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார். 1963 இல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
இயக்கிய திரைப்படங்கள்
- பக்த ராம்தாஸ் (1935)
- மார்க்கண்டேயா (1935)
- பட்டினத்தார் (1936)
- சுந்தரமூர்த்தி நாயனார் (1937)
- கிராதா அர்ஜுனா (ஊர்வசி சாகசம்) (1940)
- வேணுகானம் (1941)
- பாதுகா பட்டாபிஷேகம் (1941)
- நந்தனார் (1942)
- ஜெமினியின் 'ஞானசௌந்தரி' (1948)
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (17 அக்டோபர் 2008). "Pattinathaar 1936". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/pattinathaar-1936/article3023453.ece. பார்த்த நாள்: 30 ஆகத்து 2014.
- ↑ 2.0 2.1 2.2 தமிழ் பட டைரக்டர்கள், ம. க. த., ஹனுமான் 1939 ஆண்டு மலர், பக் 134
- ↑ "Remembering Ramnoth". தி இந்து. 3 நவம்பர் 2006 இம் மூலத்தில் இருந்து 28 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160428102536/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/remembering-ramnoth/article3231213.ece. பார்த்த நாள்: 17 அக்டோபர் 2015.