மார்க்கண்டேயா
மார்க்கண்டேயா | |
---|---|
இயக்கம் | முருகதாசா கே. ராம்நாத்[1] |
தயாரிப்பு | எம். டி. ராஜென் (வேல் பிக்சர்ஸ்) |
நடிப்பு | வி. என். சுந்தரம் ராஜபாளையம் குழந்தைவேலு பாகவதர் கே. பி. ஸ்ரீநிவாசன் லேடி பாகவதர் எம். எஸ். கண்ணா பாய் எஸ். என். கண்ணமணி |
ஒளிப்பதிவு | கே. ராம்நாத் |
வெளியீடு | மே 11, 1935 |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மார்க்கண்டேயா (Markandeya) 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா, கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. என். சுந்தரம், சி. எஸ். குழந்தைவேலு பாகவதர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
திரைக்கதை
என்றும் 16-வயதாக இருக்க சிவபெருமானால் வரமளிக்கப்பட்ட மார்க்கண்டேயர் என்னும் சிறுவனின் புராணக் கதையே இதன் திரைக்கதை ஆகும்.
நடிகர்கள்
பின்னாளில் பிரபல பின்னணிப் பாடகராக விளங்கிய வி. என். சுந்தரம் மார்க்கண்டேயராக நடித்தார். அவரது பெயர் மாஸ்டர் வி. என். சுந்தரம் எனக் காண்பிக்கப்பட்டது. குழந்தைவேலு பாகவதர் மார்க்கண்டேயரின் தந்தை மிருகண்டு முனிவராகவும் கண்ணாபாய் தாயாகவும் நடித்தனர். கண்ணாபாய் நன்கு பாடக்கூடியவராக இருந்ததால் அவர் லேடி பாகவதர் என அழைக்கப்பட்டார். கே. பி. ஸ்ரீநிவாசன் நாரதராக நடித்தார். எஸ். என். கண்ணமணி ஒரு நாடோடிப் பெண்ணாக பாடி, ஆடி நடித்திருந்தார்.[2]
தென்னிந்திய திருத்தலங்கள்
இத்திரைப்படத்தில் தென்னிந்திய திருத்தலங்களான சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருக்கடையூர் ஆகிய இடங்களிலுள்ள திருக்கோவில்கள் சிறப்பாக கே. ராம்நாத்தினால் படம்பிடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டன.[2]
மேற்கோள்கள்
- ↑ "Remembering Ramnoth". தி இந்து. 3 நவம்பர் 2006. Archived from the original on 28 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2015.
- ↑ 2.0 2.1 2.2 "Markandeya 1935". தி இந்து. 16 ஜூன் 2012. Archived from the original on 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
- Randor Guy (16 June 2012). "Blast from the past – Markandeya 1935". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130816170456/http://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/markandeya-1935/article3536326.ece.