மழவராயனேந்தல் ஊராட்சி
மழவராயனேந்தல் | |
— ஊராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
மக்களவை உறுப்பினர் |
கார்த்தி சிதம்பரம் |
சட்டமன்றத் தொகுதி | மானாமதுரை
- |
சட்டமன்ற உறுப்பினர் |
ஆ. தமிழரசி (திமுக) |
மக்கள் தொகை | 1,975 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மழவராயனேந்தல் ஊராட்சி (Malavarayanendal Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1975 ஆகும். இவர்களில் பெண்கள் 983 பேரும் ஆண்கள் 992 பேரும் உள்ளனர்.இவ்வூரில் உள்ள புலியாருடைய அய்யனார் கோவிலில் பழமையான சுடுமண் குதிரை உள்ளது. அதன் மேல் அய்யனார் அமர்ந்துள்ளார்.இக்கோவிலில் உள்ள புலியாருடைய அய்யனார் மற்றும் கருப்பசாமி ,ராக்கச்சி அம்மன் சிலைகள் பழமையானவை.இவ்வூரில் முளைப்பாரி மற்றும் அய்யனார் கோவில் மாசி களரி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஊராட்சியில் மழவராயனேந்தல் மற்றும் சம்பராயனேந்தல் என்னும் இரண்டு ஊர்களே உள்ளன.சம்பராயனேந்தல் என்னும் ஊரில் திருவாளி கருப்பண்ணசாமி,சமயண சாமிகோவில், வீரமுத்து மாரியம்மன், விநாயகர் கோவில் மற்றும் பெருமாள் கோவில் உள்ளன.திருவாளி கருப்பண்ணசாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.