மதுர வீரன்
மதுர வீரன் | |
---|---|
இயக்கம் | பி.ஜி. முத்தையா |
தயாரிப்பு | விஜி சுப்ரமணியன் |
கதை | பி.ஜி. முத்தையா |
இசை | சந்தோஷ் தயாநிதி |
நடிப்பு | சண்முகபாண்டியன் சமுத்திரக்கனி மீனாக்சி |
ஒளிப்பதிவு | பி.ஜி. முத்தையா |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
கலையகம் | பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 2, 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதுர வீரன் (Madura Veeran) பி.ஜி. முத்தையா இயக்கத்தில், விஜி சுப்ரமணியனின் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி, மீனாக்சி ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சந்தோஷ் தயாநிதி இசையிலும், பிரவீன் கே. எல் படத்தொகுப்பிலும் 2018 இல் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் இயக்குநரான பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளார்.[1]
நடிப்பு
- சண்முகபாண்டியன்- துரை (பட்டையர் மகன்)
- மீனாக்சி
- சமுத்திரக்கனி – இரத்தினவேலுவாக
- வேலா இராமமூர்த்தி - குருமூர்த்தியாக
- மைம் கோபி- மலைசாமியாக
- ஜி. மாரிமுத்து - பட்டையர் (துரையின் தந்தை)
- பி. எல். தேனப்பன் - பெருமாளாக
- பாலா சரவணன் - கோதண்டமாக
- இராசேந்திரன்
- ஏ. வினோத் பாரதி
கதை
ஊரே மதிக்கும் ஒருவர் இரத்தினவேலு (சமுத்திரக்கனி). நம்மை பிளவுபடுத்தும் சாதிகள் எதற்கு என்றும், உழைப்பவரே முதலாளி என்றும் கருத்து கொண்ட பொதுவுடைமைப் பற்றாளர். சாதிகளால் இரண்டுபட்டுக் இருக்கும் ஊரை சல்லிக்கட்டால் ஒன்றாக்க இயலும் என நம்புபவர். அவரின் தொடர் முயற்சியால், சல்லிக்கட்டும் ஊரில் நடக்கிறது. ஆனால், அவர் எண்ணியதற்கு மாறாக வன்மமும் பகையும் மேலும் வளர்ந்து, இரத்தினவேலு உள்ளிட்டப் பலரும் எதிர்பாரா வகையில் பலியாகி விடுகின்றனர்.[2] திருமணத்திற்கு பெண் தேடப்போகின்றேன் என்று தன் அம்மாவிடம் பொய் சொல்லி மலேசியாவில் இருந்து மதுரைக்கு வருகிறார் துரை. ஆனால் தனது அப்பா இரத்தினவேலுவைக் கொன்றவனை கண்டுபிடிப்பதுதான் துரையின் நோக்கம்.[3] பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு வரும் இரத்தினவேலுவின் மகன் துரை (சண்முகபாண்டியன்), தன் அப்பா இரத்தினவேலுவின் நோக்கத்தை அடையவும், தன் தந்தையைக் கொன்றவர்களை காணவும் முயலுகின்கிறார். துரை தன் இலக்கை அடைந்தாரா அவரின் இலக்கு நிறைவேறியதா? என்பதே திரைப்படத்தின் மீதிக்கதை.[4]
இசை
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை, பின்னணி இசைப் பணிகளை மேற்கோண்டுள்ளார். இப்படத்தின் ஐந்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார்.[5]
சான்றுகள்
- ↑ "Five films for Pongal: The Race starts on Friday". Thesouthindianpost.com இம் மூலத்தில் இருந்து 2018-09-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180918054620/http://www.thesouthindianpost.com/entertainment/five-films-for-pongal-the-race-starts-on-friday. பார்த்த நாள்: 2018-02-02.
- ↑ http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/madura-veeran-movie-review-118020200006_1.html
- ↑ https://tamil.filmibeat.com/reviews/madurai-veeran-review-051601.html
- ↑ https://cinema.vikatan.com/movie-review/115281-maduraveeran-movie-review.html
- ↑ http://cinema.dinamalar.com/movie-review/2352/Madurai-Veeran/