பொன்னவன் கனாநூல்
Jump to navigation
Jump to search
பொன்னவன் கனாநூல் [1] என்னும் நூலிலிருந்து நான்கு பாடல்களை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் பேற்கோளாகத் தருகிறார். [2] கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைமைந்த 30 பாடல்கள் இந்த நூலில் மண்டலித்து வருகின்றன. [3] இந்த நூலின் ஆசிரியர் பொன்னவன் என்பதை இந்த நூலின் பாடல்களில் ஒன்று தெரிவிக்கிறது. [4] இது பிரகஸ்பதி என்பவரால் வடமொழியில் செய்யப்பட்ட கனவு நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். [5] அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த 'கணபுரத் தேவன்' என்பவன் தமிழில் சொல்லப் பொன்னவன் நூலாக்கினார் எனத் தெரிகிறது. கணபுரத்தேவன் இந்த நூலாசிரியர் பொன்னவனின் தந்தை. [6] இந்த நூல் நல்ல நடையில் உள்ளது. எனினும் 11 ஆம் நூற்றாண்டிதாக நாம் கருதத் நடை இதில் இல்லை.
செய்திகள்
இந்த நூல் சொல்லும் செய்திகள்
- இன்ன யாமத்தில் கண்ட கனவு இன்ன காலத்துக்குள் பலன் தரும்.
- இன்ன கனவு இன்ன பலனைத் தரும்
பாடல் - எடுத்துக்காட்டு [7]
- விரை மலர்த் தாளில் செருப்பு மிதியடி மென் குடை என்று
- உரை செயத் தக்கன கூறிய ஆயுதம் ஒண் கனவா
- இரவிடைக் கண்டிடில் தான் பர தேசத்தில் யாத்திரை போம்
- பரவிடத் தக்கன வாள் கேடு இவற்று இவை பற்றிடுமே [8]
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 310.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ அவை இந்தத நூலின் 2, 4, 10, 12 எண் கொண்ட பாடல்கள்
- ↑ இந்த நூல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக ரா. ராகவையங்கார் பதிப்பித்துள்ளார். இதன் இரண்டாம் பதிப்பு 1920-ல் வெளிவந்துள்ளது.
- ↑ "கட்டுரையார் மகப் பொன்னவன் சொன்ன கனவு நன்னூல்" - பாடல் 30
- ↑ "உம்பர் குரு பண்டு உரைத்த கனவு நூல்" - பாடல் 1
- ↑
இவற்றை விளக்கும் தொடர்கள்
- அம்பர் கணபுரத் தேவன் சொன்னான் - பானல் 1
- கணிதரும் எந்தை கணபுரத் தேவன் கட்டுலை - பாடல் 29
- கட்டுரையார் மகப் பொன்னவன் சொன்ன கனவு நன்னூல் எட்டும் இரண்டும் இருபதும் - பாடல் 30
- ↑ பொருள் நொக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
- ↑ பாடல் 17