பி. ஜி. வெங்கடேசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. ஜி. வெங்கடேசன்
Kalidas(1931).jpg
காளிதாஸ் திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமியுடன் வெங்கடேசன் தோன்றும் காட்சி
பிறப்பு அண். 1910
இறப்பு 1950 (அகவை 40)
சேலம்,
இந்தியா
தொழில் மேடை, திரைப்பட நடிகர், பாடகர்

பி. ஜி. வெங்கடேசன் (அண். 1910 - திசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.[1] தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான காளிதாசில் (1931) கதாநாயகனாக நடித்தவர்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன்.[2] பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" எனத் திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.[1]

நடித்த திரைப்படங்கள்

பாடல்கள்

  • 1939 இல் வெளியான ஜோதி திரைப்படத்தில் விபவசுகுண தேவா, பிரம்மன் எழுத்தினால்,[3] அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆகிய பாடல்களைப் பாடினார்.
  • 1940 இல் வெளிவந்த சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே என்ற பாடலைப் பாடினார்.[4]

மறைவு

பி. ஜி. வெங்கடேசன் 1950 திசம்பர் 24 அன்று தனது 40 ஆவது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "இது செய்தி". குண்டூசி: பக். 8. சனவரி 1951. 
  2. Rangarajan, Malathi (10 மே 2012). "Tryst with the past". தி இந்து. Archived from the original on 2014-02-13. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2014.
  3. யூடியூபில் பிரம்மன் எழுத்தினால் பாடல்
  4. 'சகுந்தலை' பாட்டுப் புத்தகம். ராஜேசுவரி பிரஸ், மதுரை-40. 1940.
"https://tamilar.wiki/index.php?title=பி._ஜி._வெங்கடேசன்&oldid=21954" இருந்து மீள்விக்கப்பட்டது