கங்கணம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கங்கணம் | |
---|---|
இயக்கம் | எஸ். கே. வாசகம் |
தயாரிப்பு | ஜி. பி. நாராயண் |
கதை | ஏ. டி. கிருஷ்ணசாமி |
வசனம் | சந்திரசேகர் |
இசை | எச். ஆர். பி. சாஸ்திரி |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி மேனகா பி. ஜி. வெங்கடேசன் பி. ஆர். மங்களம் |
பாடலாசிரியர் | கம்பதாசன் |
விநியோகம் | ஜி. பி. நாராயண் கம்பனி |
வெளியீடு | 10 சூன் 1948(India)[1] |
நீளம் | 15,917 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கங்கணம் 1947 ஆம் ஆண்டு தணிக்கையாகி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புராணத் திரைப்படமாகும். எஸ். கே. வாசகத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, மேனகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
இத்திரைப்படத்தின் பாடல்களை கம்பதாசன் எழுத, எச். ஆர். பி. சாஸ்திரி இசையமைத்தார். ஏ. டி. கிருஷ்ணசாமியின் கதைக்கு சந்திரசேகர் வசனங்களை எழுதினார். சோபனாசலா கலையகத்தில் ஜி. பி. நாராயணால் தயாரிக்கப்பட்டது.[2]
இத் திரைப்படத்திலேயே பி. லீலா பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[3]
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180823045552/http://www.lakshmansruthi.com/cineprofiles/1948-cinedetails7.asp. பார்த்த நாள்: 2018-08-23.
- ↑ 2.0 2.1 "1947 வருஷத்திய வெளியீடுகள்". பேசும் படம்: பக். 121. சனவரி 1948.
- ↑ "This nightingale will be heard forever" (in ஆங்கிலம்). தி இந்து. 4 நவம்பர் 2005 இம் மூலத்தில் இருந்து 2016-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160101101608/https://www.thehindu.com/fr/2005/11/04/stories/2005110401660100.htm. பார்த்த நாள்: 23 ஆகஸ்ட் 2018.