பி. ஆர். விஜயலட்சுமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. ஆர். விஜயலட்சுமி
பிறப்புஇந்தியா
பணிஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
எஸ். சுனில் குமார்

பி.ஆர்.விஜயலட்சுமி (B. R. Vijayalakshmi) ஓர் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.

இவர் மூத்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான பி. ஆர். பந்துலுவின் (பிரணவ் பத்மநாபன்) மகளாவார். பி. ஆர். பந்துலு சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்) உள்ளிட்ட தமிழ் படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.[1] இவர் கல்லூரியில் படிக்கும்போது இவரது தந்தை இறந்துவிட்டார். இவர் திரைப்படங்களுக்காக தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

தொழில்

இவர் படங்களில் நுழைவதற்கு முன்பு உட்புற வடிவமைப்பாளராக பணியாற்றினார். இவர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் வற்புறுத்தலின் பேரில் அவருக்கு உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [2] இவர் 1980 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தமிழ் திரைப்படத்தில் அசோக் குமாருடன் பணியாற்றினார். அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு அவருடன் தொடர்ந்தார்.[3] இதே நேரத்தில் கை கொடுக்கும் கை (1984), பிள்ளைநிலா (1985) போன்ற படங்களிலும் பணியாற்றினார்.

1985ஆம் ஆண்டு வெளியான சின்ன வீடு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவரது திரைப்பட அறிமுகம் இருந்தது. ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட விஜயலட்சுமி 1985க்கும் 1995க்குமிடையில் 22 படங்களில் பணியாற்றினார்.[1][4] ஸ்ரீதர், ஜி. எம். குமார் உள்ளிட்ட இயக்குனர்களுக்காக அறுவடை நாள் (1986), சிறைப்பறவை (1987), இனிய உறவு பூத்தது (1987) ஆகிய படங்களில் பணியாற்றினார். இவர் சங்கீத் சிவனின் டாடி (1992) என்ற மலையாளப் படத்திற்கு திரைக்கதையை எழுதினார். 1995ஆம் ஆண்டில், பாட்டு படவா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்துக்காக இவர் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவையும் கையாண்டார். இந்த படம் 1996இல் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இளையராஜாவின் பாடல்களுக்காகவும் அறியப்பட்டது.

இவரது திரைப்பட வாழ்க்கைக்கு மேலதிகமாக, "மை டியர் பூதம்", "வேலன்", "ராஜ ராஜேஸ்வரி" உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றினார்.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கணினி வரைகலைகளை முதன்முதலில் கொண்டு வந்த இவர். "அத்திப்பூக்கள்", "வள்ளி" போன்ற பிற தென்னிந்திய நாடகத் தொடர்களைச் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர் திரைப்படங்களை விட்டுவிட்டு தொலைக்காட்சியில் கவனம் செலுத்தினார். தொலைக்காட்சியில் இவரது முதல் முயற்சி குழந்தைகளுக்கானத் தொடரான வசந்தம் காலனி என்ற தொடராகும்.[1] மாயா மச்சீந்திரா ( விஜய் தொலைக்காட்சி ) , "வேலன்" ( சன் தொலைக்காட்சி ) ஆகியவை இவர் பணியாற்றிய மற்ற முக்கிய தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றாகும்.

இவர் இந்திய இசை நிறுவனமான சரிகமவின் படைப்பாற்றல் தலைவராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 2005இல், இவர் நிறுவனத்தின் தொலைக்காட்சி மென்பொருள் பிரிவின் வணிகத் தலைவரானார்.[4] சரிகம பின்னர் காரவான் எனப்படும் கையடக்க நுகர்வோர் மின்னணு சாதனமான வானொலி போன்ற எம்பி 3 வகைகளின் உற்பத்தியிலும், விற்பனையிலும் கவனம் செலுத்தியது.

சொந்த வாழ்க்கை

இவரது சகோதரர் பி. ஆர். ரவிசங்கர் கன்னடத் திரைத் துறையில் திரைப்படத் தயாரிப்பாளராக இருக்கிறார்.[1] விஜயலட்சுமி குழந்தை பருவத்திலிருந்தே நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான சுஹாசினியின் தோழியாவார். இயக்குநர் மணிரத்னம் விஜயலட்சுமியின் சகோதரரின் நெருங்கிய இளமைக்கால நண்பராவார். இது சுஹாசினி-மணிரத்தினத்தின் திருமணத்திற்கு வழிவகுத்தது.

விஜயலட்சுமி ஒலிப்பதிவாளர் சுனில்குமாரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._ஆர்._விஜயலட்சுமி&oldid=21357" இருந்து மீள்விக்கப்பட்டது