பாலக்காட்டு மாதவன்
பாலக்காட்டு மாதவன் | |
---|---|
இயக்கம் | எம். சந்திரமோகன் |
தயாரிப்பு | டிசிஎம் |
கதை | எம். சந்திரமோகன் |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | கே. ராஜகோபால் |
கலையகம் | டிசிஎம் |
வெளியீடு | 3 சூலை 2015(India) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாலக்காட்டு மாதவன் (Palakkattu Madhavan) 2015ம் வருடம் தமிழ் மொழியில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். இத் திரைப்படம் குருவன்ன பஷீர் தயாரிப்பில், எம். சந்திரமோகன் திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்தது. இத் திரைப்படத்தில் விவேக் மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடங்களிலும், ஷீலா கெளரவ வேடத்திலும் நடித்துள்ளனர்.[1][2][3]
கதை சுருக்கம்
பாலக்காட்டு மாதவன் விவேக் ,சோம்பேறித்தனமான, பொறுப்பற்ற மனிதனாக உள்ளான். அவன் மனைவி லட்சுமி (சோனியா அகர்வால்), மாதவனை விட அதிகம் வருவாய் ஈட்டுபவராக உள்ளார். மாதவன் தான் பார்க்கும் வேலையை விட்டுவிடுகிறான். இதனால் வீட்டில் இருவருக்கும் சண்டை வருகிறது. பிறகு, மாதவன் வயதான பெண்மணி, பட்டு மாமியை ஷீலா வாடகைத் தாயாக வீட்டிற்கு அழைத்து வருகிறான். பட்டுமாமி மாதவனுக்கு பண உதவி செய்கிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவையுடன் இத் திரைப்படம் சித்தரிக்கிறது.
பாலக்காட்டு மாதவன் கதாபாத்திரத்தின் பெயர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த "அந்த ஏழு நாட்கள்" திரைப்பட கதாபாத்திரத்தின் பெயரோடு ஒத்துப்போகிறது. 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தில் கே. பாக்யராஜ் (நடிகர்) மற்றும் அம்பிகா (நடிகை) நடித்துள்ளனர். இது அக் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
நடிப்பு
- பாலக்காட்டு மாதவனாக விவேக்
- லட்சுமியாக சோனியா அகர்வால்
- பாட்டு மாமியாக ஷீலா
- உ. சந்தோஷ் குமாராக ராஜேந்திரன்
- கோகிலா மாமியாக ஆர்த்தி
- இமான் அண்ணாச்சி
- மனோபாலா
- சுவாமிநாதன்
- பாண்டு
தயாரிப்பு
2014ம் ஆண்டு, சூன் மாதம் எம்.சந்திரமோகன் இயக்குநராகவும், சாஜீவ் தயாரிப்பிலும், விவேக் கதாநாயகனாக நடிக்க,இத் திரைப்படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.[4]
வரவேற்பு
"ஸிஃபி" சிஃபி பத்திரிகை, இத் திரைப்படத்திற்கு ஐந்துக்கு நான்கு புள்ளிகள் கொடுத்தது. மேலும் விவேக் வரும் காட்சிகளில் ரசிகர்கள் ஈடுபாட்டுடன் படத்தை ரசித்தனர் எனப் பாராட்டியது.[5]"டைம்ஸ் ஆஃப் இந்தியா" தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு பொதுவாக பாராட்டினாலும், திரைக்கதையில் தொய்வு உள்ளதை சுட்டிக்காட்டியது.[6]
இத் திரைப்படம் வெளியான முதல் நாள் வசூல் சென்னையில் ரூபாய் 8 லட்சம். இந்த வசூல் ஏமாற்றத்தை தந்தது. பாக்ஸ் ஆபிஸில் இத் திரைப்படம் ரூபாய் 1.2. கோடி வசூல் செய்தது.
இசை அமைப்பு
இத் திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசை அமைத்துள்ளார்.[7] நடிகர் விவேக் எழுதிய "உச்சிமேல" எனத் தொடங்கும் பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார்.[8]
- உச்சிமேல — அனிருத் ரவிச்சந்தர்
- சந்தோசமே — ஸ்ரீராம் பார்த்தசாரதி
- எப்படி இருந்தேன் — கங்கை அமரன்
- கண்ணன் போல் — சர்முகி ராமன்
மேற்கோள்கள்
- ↑ Upadhyaya, Prakash (3 July 2015). "'Palakkattu Madhavan' (Palakkad Madhavan) Review: Live Audience Response". International Business Times. http://www.ibtimes.co.in/palakkattu-madhavan-palakkad-madhavan-review-live-audience-response-637950. பார்த்த நாள்: 10 September 2015.
- ↑ "Palakkattu Madhavan Movie Details". Tamil Star. July 2015 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924113345/http://www.tamilstar.com/profile/movies/palakkattu-madhavan/filmography-short/600. பார்த்த நாள்: 10 September 2015.
- ↑ "Palakkattu Madhavan for Tomorrow". Tamil Star. 2 July 2015 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924113115/http://www.tamilstar.com/news-id-palakkad-madhavan-from-tomorrow-palakad-madhavan-palakkad-madhavan-02-07-1511943.htm. பார்த்த நாள்: 10 September 2015.
- ↑ "Palakkattu Madhavan - Making of Uchi Mela Song Video" (Video (flash)). Behindwoods. 2 July 2015. http://behindwoods.com/tamil-movies/palakad-madhavan/palakad-madhavan-song-1.html. பார்த்த நாள்: 10 September 2015.
- ↑ "Palakkattu Madhavan film review". சிஃபி. July 2015 இம் மூலத்தில் இருந்து 6 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150706014744/http://www.sify.com/movies/palakkattu-madhavan-review-tamil-phdjHJaahaeeg.html. பார்த்த நாள்: 10 September 2015.
- ↑ Suganth, M (4 July 2015). "Palakkattu Madhavan — Ivan Tamilan Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Palakkattu-Madhavan-Ivan-Tamilan/movie-review/47933939.cms. பார்த்த நாள்: 10 September 2015.
- ↑ "Palakkattu Madhavan (2014)". Tamil Tunes. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015.
- ↑ "Palakkattu Madhavan - Making of Uchi Mela Song - Anirudh, Vivekh, Srikanth Deva" (video (flash)). Namma Trend. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015.